செய்திகள் :

கங்கணம் கட்டிக்கொண்டால் திருமண வரம்; கல்யாண கங்கண பிராப்த பூஜை சங்கல்பியுங்கள்

post image

கல்யாண கங்கண பிராப்த பூஜை: இங்கு திருவோணம் மற்றும் ஏகாதசி நாளில் மஞ்சள் தடவிய மஞ்சள் கங்கணத்தை பெருமாள் பாதத்தில் வைத்து கட்டப்படும் கங்கணம் பலருக்கும் திருமண வரத்தைக் கொடுத்துள்ளது. 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

கல்யாண கங்கண பிராப்த பூஜை


திருமலை வையாவூர் ஸ்ரீஸ்ரீசீதாராம சுவாமிகள் உத்தரவின்படி, ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் திருமங்களாசாஸனம் செய்விக்கப்பட்டு எழுந்தருளியவர் புதுச்சேரி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீகல்யாண வேங்கடேச பெருமாள். திருப்பதி உற்சவர் கல்யாணக் கோலத்தில் அருள்வதுபோலவே இங்கு மூலவரே கல்யாணத் திருக்கோலத்தில் அருள்கிறார். இங்கு திருவோணம் மற்றும் ஏகாதசி நாளில் கட்டப்படும் கல்யாண கங்கணம் விஷேசமானது. மஞ்சள் தடவிய மஞ்சள் கங்கணத்தை பெருமாள் பாதத்தில் வைத்து கட்டப்படும் கங்கணம் பலருக்கும் திருமண வரத்தைக் கொடுத்துள்ளது. இதே நாளில் நடைபெறும் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனைகளும் விசேஷமானவை.

திருமண வரம் வேண்டுவோர் மற்றும் திருமண வரம் கிடைத்தவர்கள் இங்கு வந்து தங்கள் வயதுக்கு இணையான நெய்தீபம் ஏற்றி வழிபடுவர். மேலும் அனுமன், துர்கை, விநாயகருக்கென 2 விளக்குகள் வீதம் 6 விளக்குகள் ஏற்றி வழிபடுவர். இதனால் அவர்களின் திருமண வாழ்வு சிறப்பாக அமையும் என்பதும் நம்பிக்கை. தலைமுறை தலைமுறையாக இங்கு வந்து திருமண வரம் பெற்றவர்களும் உண்டு. உள்ளூர் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து வந்து பலன் பெற்றவர்களும் அநேகம். கல்யாண வரம் மட்டுமல்ல ஆயுள் விருத்திக்கான தலமாகவும் விளங்குகிறது.

கல்யாண கங்கண பிராப்த பூஜை

புதுச்சேரி-கடலூர் எல்லையில் ஏம்பலம் தென்னம்பாக்கத்தில் அழகர் சித்தர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீகல்யாண வேங்கடேசர் ஆலயம் உள்ளது. இங்குள்ள பெருமாள் மட்டுமின்றி ஒவ்வொரு சந்நிதியில் வீற்றிருக்கும் தெய்வங்களும் ஒவ்வொரு பரிகாரத்துக்கு பலன் தருகிறார்கள் என்பதும் விசேஷம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சக்தி விகடன் வாசகர்களுக்கு விரும்பிய வரன் கிடைக்கவும் திருமண வாழ்க்கை இனிமையாக அமையவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது. காலை 11.30 மணி அளவில் நடைபெறும் இந்த விசேஷ பரிகார பூஜையில் நீங்களும் கலந்துகொள்ளலாம். அதன் பலனாக, சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

கல்யாண கங்கண பிராப்த பூஜை

இங்கு தரப்படும் ரட்சையும் குங்குமமும் உங்களுக்கான தீர்வாக அமையும். 48 நாள்களுக்குள் உங்கள் பிரச்னை யாவும் தீரும்; உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தையும் அதிசயத்தையும் காண்பீர்கள்!

மேலும் இங்கு ஏகாதசி சக்கரத்தாழ்வார் வழிபாடும், திருவோண பெருமாள் வழிபாடும் சுவாதி நட்சத்திர நாளில் ஸ்ரீநரசிம்ம வழிபாடும் சிறப்பானது.

ராகு-கேதுவுக்கான பரிகார பூஜைகளும் இங்கு சிறப்பானது. தேய்பிறை அஷ்டமியில் செய்யப்படும் துர்கா பூஜையும் உங்கள் வாழ்வை வளமாக்க உதவும் என்பது நம்பிக்கை.

புதுவை தென்னம்பாக்கம் ஸ்ரீகல்யாண வேங்கடேச பெருமாள் தலத்தில் நடைபெறும் கல்யாண கங்கணப் பிராப்த பூஜையில் கலந்து கொண்டால் உங்கள் வாழ்வின் குறைகள் யாவும் தீர்ந்து நலங்கள் சேரும் என்பது நிச்சயம்.

KANGANA PIRAPTHA POOJAI QR CODE FOR REGISTRATION

KANGANA PIRAPTHA POOJAI QR CODE FOR REGISTRATION

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பூஜை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

பழனி: குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | Photo Album

குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்குழந்தைகளுடன் முர... மேலும் பார்க்க

திருச்செந்தூர் குடமுழுக்கு: ``சமஸ்கிருதம் - தமிழ் சமநிலைக் கொடுக்க வேண்டும்'' - நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கை தமிழில் மந்திரங்கள் ஓதி நடத்தக்கோரி ஆழ்வார் திருநகரிதிருநகரியைச் சேர்ந்த அ.வியனரசு தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முடித்து வைக்கப்பட்டது. உயர் ... மேலும் பார்க்க

எவ்வளவு முயன்றும் திருமணம் ஆகவில்லையா? கங்கணப் பிராப்த பூஜையில் சங்கல்பியுங்கள்! உடனடி பலன் நிச்சயம்

திருமண வரன் அமையவும் குடும்ப ஒற்றுமை மேலோங்கவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பூஜை நடத்தப்படவுள்ளது. இதில் கலந்துகொண்டு இனிய இல்லறத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.கங்கணப் ... மேலும் பார்க்க

மங்கல காரியங்கள் மனம் போல நிகழ முகப்பேருக்கு வாங்க; திருவிளக்கு பூஜை ஸ்பெஷல்

2025 ஜூலை 11-ம் தேதி முகப்பேர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக...விளக்கு பூஜை... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: அறுபடை ஓவியம், தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை.. குடமுழுக்கு பணிகள் தீவிரம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை, 7 -ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. 14 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழ... மேலும் பார்க்க