செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
தமிழக வீரர் டி. குகேஷிடம் மீண்டும் ஒருமுறை மாக்னஸ் கார்ல்செனை தோல்வியுற்றார். அதன்பிறகு அளித்த பேட்டியில், “செஸ் விளையாட பிடிக்கவில்லை” என கார்ல்சென் கூறியது கவனம் ஈர்த்துள்ளது.
குரேஷியாவில் நடைபெறும் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஜ் தொடரின் 6-ஆவது சுற்றில் உலக சாம்பியனும் தமிழக வீரருமான குகேஷ் முன்னாள் உலக சாம்பியனும் உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்செனும் மோதினார்கள்.
குகேஷ் கறுப்பு நிற காய்களுடனும் கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்கள்.
இந்தப் போட்டியில் குகேஷின் 49-ஆவது நகர்த்தலில் கார்ல்சென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
சமீபத்தில் நார்வே செஸ் தொடரிலும் கார்ல்செனை குகேஷ் வீழ்த்தினார்.
இருப்பினும், கார்ல்சென் 7-ஆவது முறையாக நார்வே செஸ் பட்டத்தை வென்றார். அதனால்தான் அவர் உலகின் நம்.1 வீரராக இருக்கிறார்.
தமிழக வீரர் குகேஷை பலமுறை பலவீனமாக வீரர் என்றுகூறிய கார்ல்சென் ஒரே மாதத்திற்குள் 2 முறை தோல்வியுற்றுள்ளார்.
போட்டிக்குப் பிறகு கார்ல்சென் கூறியதாவது:
தற்போதைக்கு எனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை. நான் விளையாடும்போது எனக்கு சரியான மனநிலை அமையவில்லை.
நான் தொடர்ச்சியாக தயங்கி தயங்கி விளையாடியதால் தற்போது மோசமான நிலைக்கு உள்ளாகியுள்ளேன்.
குகேஷ் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தத் தொடர் மிகவும் நீண்டது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்றது பாராட்டத்தக்கது என்றார்.
World number one Magnus Carlsen says he is struggling to enjoy chess after suffering a second consecutive defeat to reigning world champion D Gukesh, who the Norwegian has described as a "weak" player multiple times.