செய்திகள் :

Suriya 45: `சிங்கம் படத்துக்குப் பிறகு இந்தப் படம் கூரையைப் பிச்சுட்டு போகும்!' - சாய் அபயங்கர்

post image

சுயாதீன இசைத்துறையின் தற்போதைய சென்சேஷன், சாய் அபயங்கர், இதுவரை மூன்று சுயாதீன பாடல்களை மட்டுமே வெளியிட்டிருக்கிறார்.

அந்தப் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பெரிய திரைப்படங்களின் இயக்குநர்களும் சாய் அபயங்கரின் பெயரை இசையமைப்பாளராகத் டிக் அடித்திருக்கிறார்கள்.

சாய் அபயங்கர்
சாய் அபயங்கர்

தற்போது, சூர்யா, சிம்பு, ப்ரதீப் ரங்கநாதன், ராகவா லாரன்ஸ் போன்ற உச்ச நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் சாய்.

அதைத் தொடர்ந்து, தற்போது அவருடைய நான்காவது சுயாதீன பாடலையும் தயார் செய்துவிட்டார். அந்தப் பாடல் ஜூலை 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அந்தப் பாடலின் அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

'கருப்பு'

அந்த நிகழ்வில் சாய் அபயங்கர் பேசுகையில், "அடுத்தடுத்து அப்டேட்கள் வந்துகொண்டிருக்கின்றன. எல்லோரும் நான் அதில் என்ன பண்ணியிருக்கேன் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அறிவிக்கப்பட்ட படங்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியாகும். சூர்யா சாருடைய 'கருப்பு' படத்தின் டீசர், அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகவிருக்கிறது.

அவரை நீங்கள் எப்படியெல்லாம் பார்க்க விரும்பினீர்களோ, அத்தனையும் இந்தப் படத்தில் இருக்கும்.

'Karuppu' Movie Team
'Karuppu' Movie Team

'சிங்கம்' படத்துக்குப் பிறகு, கூரையைப் பிய்த்துக்கொண்டு போகும் படமாக இது இருக்கும். படத்தைப் பற்றி இப்போது நான் அதிகமாகப் பேச முடியாது. ரசிகர்களுக்கான விஷயங்களும் 'கருப்பு' படத்தில் இருக்கின்றன.

ப்ரதீப் ரங்கநாதன் ப்ரதரின் 'டியூட்' படத்தின் அப்டேட்டும் அடுத்து வரவிருக்கிறது. நல்ல கதைகளாக இருக்கும் படங்களுக்கு நிச்சயமாக நான் இசையமைப்பேன்.

நல்ல படங்களில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையோடுதான் நான் பசியோடு இருக்கிறேன்," என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Suresh Raina: "இனிதான் சின்ன தல ஆட்டம் ஆரம்பம்!" - ஹீரோவாக அறிமுகமாகும் ரெய்னா!

ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. சுரேஷ் ரெய்னா இதுவரை சின்ன சின்ன விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு கமிட்டா... மேலும் பார்க்க

Paranthu Po: "முதல்முறை என் படத்த பார்த்து சிரிச்சுட்டே வெளிய வர்றாங்க" - இயக்குநர் ராம் நெகிழ்ச்சி!

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4-ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.நகரத்தில் வீட்டிலேயே அடைபட்டிருக்கும் சிறுவன், ஒருநாள் தந்தையுடன் வெளியி... மேலும் பார்க்க

`அசத்தும் செல்வா - யுவன் கூட்டணி, '7ஜி ரெயின்போ காலனி 2' டீசர்' - ஹீரோ அண்ணன் சொல்லும் அப்டேட்

காதலுக்காகவும், இதயத்தை இதமாக்கும் பாடல்களுக்காகவும் கொண்டாடப்பட்ட படம் '7ஜி ரெயின்போ காலனி'. கடந்த 2004ம் ஆண்டு வெளியானது. படத்தின் இயக்குநர் செல்வராகவனுக்கு 'நிஜ உலகத்தை நெருங்கிப் பார்த்து படமெடுக்... மேலும் பார்க்க