செய்திகள் :

ஃபஹத் ஃபாசில் - நிவின் பாலி கூட்டணியில் புதிய படம்!

post image

நடிகர் நிவின் பாலி இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்தாண்டு பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு நெருக்கமான கதைக்களத்தில் உருவான இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமானது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரேமலுவின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியானது. ஆனால், அப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிரிஷ் ஏடி நடிகர் நிவின் பாலியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கவுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் ஃபஹத் ஃபாசில் இப்படத்தைத் தயாரிக்க நாயகியாக நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார்.

இப்படமும் பிரேமலு போல் நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகிறதாம்.

இதையும் படிக்க: ஓடிடியில் வெளியான ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்!

director girish ad do a new film with actors nivin pauly, mamitha baiju produced by fahadh faasil

வெளியானது 'தேசிங்குராஜா-2' பட டிரைலர் !

விமல் நடிப்பில் உருவான 'தேசிங்குராஜா-2' படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. இதில் விமல் நாயகனாகவும் அவ... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியான ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ஹண்ட் தொடர் ஓடிடியில் வெளியாகியுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பதூரில் குண்டுவெடிப்பின் ... மேலும் பார்க்க

விம்பிள்டனில் முதல்முறை... துருக்கி வீராங்கனை நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை என்ன?

முதல்முறையாக 3-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்று துருக்கி வீராங்கனையாக ஜெய்னெப் சான்மெஜ்சாதனை படைத்துள்ளார். புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் ஜூன் 23 முதல் தொடங்கி ஜூலை 13ஆம் தேதி வர... மேலும் பார்க்க

முத்த மழை - சின்மயி விடியோ வடிவம் வெளியீடு!

சின்மயி பாடிய முத்த மழை பாடலின் விடியோ வடிவம் வெளியானது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜுன். 5 ஆம் தேதி வெளியானது.படத்தின் கதை ம... மேலும் பார்க்க