திண்டுக்கல்: கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிபட்ட முருகன் கோயில்!
திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் போகர் நகரில் உலகப் புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் அமைந்துள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மற்றும் TNPL திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனுமான அஸ்வின் பாதாள செம்பு முருகன் கோயிலுக்கு சென்று வழிப்பட்டார். கோயில் நிர்வாகம் சார்பாக பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து பூர்ண கும்ப மரியாதையோடு அவரை வரவேற்றனர்.

முன்னதாக செம்பு முருகன் வளாகத்தில் உள்ள காவல் தெய்வமான சங்கிலி கருப்புவை தரிசனம் செய்துவிட்டு பின்னர் 8 கருங்காலி மாலைகளை வாங்கி முருகனுக்கு சாற்றி வழிபட்டார் . மேலும் கருங்காலி மாலையும் அஸ்வின் வாங்கி அணிந்துகொண்டார். பாதாள செம்பு முருகன் கோயிலுக்கு வருகை தந்த அஸ்வினுடன் பக்தர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.