செய்திகள் :

ENGvsIND: 'பும்ரா எங்க? சாய் சுதர்சன் எங்க?' - அணித்தேர்வை வெளுத்து வாங்கிய ரவி சாஸ்திரி

post image

'பிளேயிங் லெவன் மாற்றஙகள்!'

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான ப்ளேயிங் லெவனில் இந்திய அணி நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறது. ப்ளேயிங் லெவனில் பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் ட்ராப் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த மாற்றங்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Sai Sudharsan
Sai Sudharsan

'ரவி சாஸ்திரி விமர்சனம்!'

போட்டிக்கு முன்பாக வர்ணனையில் பேசிய ரவிசாஸ்திரி, 'இந்திய அணியின் தேர்வை பார்க்க சர்ப்ரைஸாக இருக்கிறது. இது மிக முக்கியமான போட்டி. ஒரு வாரத்துக்கும் மேலாக ஓய்வெடுத்துவிட்டு இந்தப் போட்டிக்கு வருகிறீர்கள். ஆனால், அணியில் பும்ரா இல்லை. இதுதான் எனக்கு சர்ப்ரைஸாக இருக்கிறது.

போட்டியில் ஒரு வீரர் ஆட வேண்டுமா இல்லையா என்பதைக் கேப்டனும் பயிற்சியாளர்களும் மட்டும்தான் முடிவு செய்ய வேண்டும். இது முக்கியமான போட்டி. முதல் போட்டியில் இந்திய அணி தோற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்கவேண்டும். அப்படியிருக்க பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும்.

Bumrah

லார்ட்ஸ் போட்டியை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் இந்தப் போட்டியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சாய் சுதர்சனும் இல்லை. அவர் முதல் போட்டியில் நன்றாகத்தான் ஆடியிருந்தார். அவரை ட்ராப் செய்தது ரொம்பவே கடுமையான முடிவு. குல்தீப் யாதவும் அவருடைய வாய்ப்புக்காக இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.' என்றார்.

`அசத்திய பவுலர்கள்' சேப்பாக் சூப்பர் கில்லீஸை சுருட்டிய இறுதிப் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி

திண்டுக்கல் நத்தத்தில் டிஎன்பிஎல் குவாலிபையர் -1 ஆட்டம் நேற்று நடைபெற்றது. அட்டவணையில் முதல் இரண்டு இடத்தில் இருந்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. டாஸ்... மேலும் பார்க்க

``முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்'' - ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.முகமது ஷமிக்கும், ஹசின் ஜஹானுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம... மேலும் பார்க்க

CSK : 'சென்னை அணியில் சஞ்சு சாம்சனா?' - ஐ.பி.எல் இன் டிரேட் விதிகள் சொல்வதென்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் தங்கள் அணிக்கு வாங்கவிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. சென்னை அணியால் சாம்சனை வாங... மேலும் பார்க்க

`அஜித்குமாரை கடுமையாகத் தாக்கிய தனிப்படை போலீஸ்' - வெளியான அதிர்ச்சி வீடியோ; வலுக்கும் கண்டனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோயிலுக்கு வந்த மருத்துவர் நிகிதா என்பவர் தனது காரில் இருந்த நகை காணாமல் போனதாக போலீஸில் அளித்த புகாரில், கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார... மேலும் பார்க்க

'Captain Cool' என்ற பெயரை வர்த்தக முத்திரையாக பதிவு செய்த தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரசிகர்கள் அவரது தலைமைத்துவத்தை மெச்சி அழைக்கும் 'கேப்டன் கூல் (Captain Cool)' என்ற பெயரை வர்த்தக முத்திரையாக (ட்ரேட் மார்க்) பதிவு செய்து... மேலும் பார்க்க

Rishabh Pant: "விபத்துக்குப் பின் கண்விழித்ததும் பண்ட் முதலில் கேட்டது..!" - பகிரும் மருத்துவர்

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கடந்த 2022 டிசம்பரில் டெல்லியிலிருந்து தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்துக்குள்ளானார்.அதிர... மேலும் பார்க்க