செய்திகள் :

`அஜித்குமாரை கடுமையாகத் தாக்கிய தனிப்படை போலீஸ்' - வெளியான அதிர்ச்சி வீடியோ; வலுக்கும் கண்டனம்

post image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோயிலுக்கு வந்த மருத்துவர் நிகிதா என்பவர் தனது காரில் இருந்த நகை காணாமல் போனதாக போலீஸில் அளித்த புகாரில், கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் 6 பேர் விசாரணை என்ற பெயரில் அடித்துத் தாக்கியிருக்கின்றனர்.

நகை காணாமல் போனதாக முறையாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யாமல், காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்காமல் கோயிலுக்கு பின்புறத்திலேயே அஜித்குமாரை போலீஸார் கடுமையாகத் தாக்கவே, அவர் மரணமடைந்தார்.

திருப்புவனம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர்

இச்சம்பவம் மாநில அளவில் பெரிதாக வெடிக்கவே நீதிமன்றம் இதை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் அதிமுக வழக்கறிஞர்கள் செய்த முறையீட்டை மதுரை உயர் நீதிமன்ற கிளை நேற்று விசாரித்தது.

ஆனால், அதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட தனிப்படை போலீஸார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மறுபக்கம், இவ்வழக்கை உயர் நீதிமன்ற கிளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனிப்படை போலீஸார் மீது ஏன் வழக்கு கூட பதிவுசெய்யாமல் சஸ்பெண்ட் செய்தனர், ஏன் கைதுசெய்யவில்லை என அரசியல் கட்சிகள் கேள்விகள் எழுப்பிக்கொண்டிருந்த வேளையில், "நகையைத் திருடியதாக அஜித்குமார் ஒப்புக்கொண்டார், போலீஸிடமிருந்து தப்பிக்க முயன்றபோது அஜித்குமார் கீழே விழுந்ததில் அவருக்கு வலிப்பு ஏற்பட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்" என எஃப்.ஐ.ஆரில் காவல்துறை தெரிவித்தது.

அதையடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டு, 5 பேர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டனர்.

திருப்புவனம் லாக்கப் மரணம்
திருப்புவனம் லாக்கப் மரணம்

உடற்கூராய்வு சோதனையில் அஜித்குமார் உடலில் பல இடங்களில் காயம் இருந்ததாகச் சொல்லப்படும் வேளையில், எப்.ஐ.ஆரில் வலிப்பு வந்து இறந்ததாகக் குறிப்பிட்டிருப்பது முரணாக இருக்கும் சூழலில், அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இந்த வீடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து, "இது கொடூரமான மிருகத்தனம். முழு தமிழக காவல்துறையும் மறு பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.

அஜித்குமாரின் கொடூரமான கொலையில் தொடர்புடைய அனைவரும் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட வேண்டும்." என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

CSK : 'சென்னை அணியில் சஞ்சு சாம்சனா?' - ஐ.பி.எல் இன் டிரேட் விதிகள் சொல்வதென்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் தங்கள் அணிக்கு வாங்கவிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. சென்னை அணியால் சாம்சனை வாங... மேலும் பார்க்க

'Captain Cool' என்ற பெயரை வர்த்தக முத்திரையாக பதிவு செய்த தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரசிகர்கள் அவரது தலைமைத்துவத்தை மெச்சி அழைக்கும் 'கேப்டன் கூல் (Captain Cool)' என்ற பெயரை வர்த்தக முத்திரையாக (ட்ரேட் மார்க்) பதிவு செய்து... மேலும் பார்க்க

Rishabh Pant: "விபத்துக்குப் பின் கண்விழித்ததும் பண்ட் முதலில் கேட்டது..!" - பகிரும் மருத்துவர்

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கடந்த 2022 டிசம்பரில் டெல்லியிலிருந்து தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்துக்குள்ளானார்.அதிர... மேலும் பார்க்க

Rohit Sharma: `இரவெல்லாம் தூங்கவில்லை, பதட்டமாக இருந்தேன்' - ரோஹித்தின் டி 20 உலக கோப்பை நினைவுகள்

ஜூன் 29, 2024-ல் இந்திய கிரிக்கெட் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த விறுவிறுப்பான போட்டியில் இந்தியா வெறும் 7 ரன்கள் வித்தியா... மேலும் பார்க்க

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி நடை

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரை பேந்தர்ஸ் அணியை டக்வ... மேலும் பார்க்க

TNPL சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்.. மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி | Photo Album

Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dind... மேலும் பார்க்க