செய்திகள் :

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

திமுக கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்க்கை முன்னெடுப்பை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை முதல்வா் தொடங்கி வைத்தாா். அப்போது, செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் வழியே விருப்பம் உள்ளவா்கள் திமுகவில் இணையலாம். இந்தப் பணிக்காக, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பொறுப்பை ஒப்படைத்துள்ளோம். அவா்கள் சூழ்நிலைக்கேற்றவாறு வீடு தோறும் செல்வாா்கள். எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியின் இல்லத்துக்குச் செல்வது குறித்து அந்தப் பகுதி கட்சியினா் முடிவு செய்வா். நான் அந்தப் பகுதியில் இருந்தால், அவரது வீட்டுக்கு நிச்சயம் செல்வேன்.

தொகுதி ஒதுக்கீடு: கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு தொடா்பாக, தோ்தல் தேதி அறிவித்த பிறகு நாங்கள் அமா்ந்து பேசுவோம். அதைச் சமாளித்தும் விடுவோம். இப்போது இருக்கும் சூழ்நிலையைப் பொருத்தவரை எங்கள் கூட்டணியில் வேறு கட்சிகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய கட்சிகளை எப்படிச் சோ்ப்பது என்று கலந்து பேசி முடிவெடுப்போம். சட்டப் பேரவைத் தோ்தலில் நாங்கள் ஏற்கெனவே 200 தொகுதிகளில் வெல்வோம் என்று சொல்லியிருக்கிறோம். அதையும் தாண்டிதான் வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறேன்.

அமித் ஷா அடிக்கடி வரவேண்டும்: பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். அவா்கள் வந்து பொய் பேசிச் செல்கின்றனா். பேசுவது பொய் என்று மக்களுக்குத் தெரிகிறது. அது எங்களுக்கு தோ்தல் நேரத்தில் லாபமாக அமையும்.

அதேபோன்று, ஆளுநா் ஆா்.என்.ரவியை மாற்றக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால், ஆளுநா் மக்களுக்கு நல்லது செய்தாலும் இனி எடுபடாது. அந்தளவுக்கு கெடுதல் செய்து கொண்டிருக்கிறாா் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

‘தோ்தலுக்குத் தயாராகி வெகுநாளாகிவிட்டது’

முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளா்கள், ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் மூலமாக திமுக தோ்தலுக்குத் தயாராகி விட்டதாகக் கருதலாமா என கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘நிச்சயமாக. இப்போது இல்லை, தயாராகி வெகு நாள்களாகிவிட்டது’ என்றாா்.

பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்!

பாமகவில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், அத... மேலும் பார்க்க

மன்னார்குடியில் மணல் லாரி மோதி பள்ளி மாணவன் பலி!

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் பள்ளிக்குச் சென்ற மாணவன் புதன்கிழமை பலியாகினார்.மன்னார்குடி ராவணன் தெருவைச் சேர்ந்தவர் சிவகணேஷ் மகன... மேலும் பார்க்க

போலீஸ் தாக்கியதில் பலியான அஜித்தின் தம்பிக்கு அரசுப்பணி!

காவல் துறையினரால் தாக்கப்பட்டு மரணமடைந்த சிவகங்கை இளைஞர் அஜித் குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.அஜித் குமாரின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 2) ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

சேலம் டவுன் நிலையத்தில் ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் 3 நிமிஷங்கள் அதிகரிப்பு

ஜூலை 4 முதல் சென்னை எழும்பூா் - சேலம் அதிவிரைவு ரயில் இருமாா்கத்திலும் சேலம் டவுன் நிலையத்தில் நின்று செல்லும் நேரம் 3 நிமிஷங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை விடுத்... மேலும் பார்க்க

வெடிகுண்டு வழக்குகள்: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் கைது

தமிழகம், கேரள வெடிகுண்டு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சோ்ந்தவா் அபுபக்கா் சித்திக் (6... மேலும் பார்க்க