செய்திகள் :

பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்!

post image

பாமகவில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், அது பெரிதாக வெடித்தது. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அன்புமணி செயல் தலைவர் பதவியை ஏற்று பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, ராமதாஸுக்கு ஆதரவாக இருந்ததால் பாமக சேலம் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கப்பட்டார். இதனால், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறித்த எம்எல்ஏ கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த தருமபுரி பாமக எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அவர் கடுமையான விளைவுகளைச் சந்திக்க எனவும் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், பாமக எம்எல்ஏ அருள் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இரா. அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாமகவின் அமைப்புச் சட்ட விதியின்படி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று (ஜூலை 2) இரா. அருள் நீக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் தனிப்படைகள் கலைப்பு - டிஜிபி உத்தரவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, காவல் நிலையங்களில் உரிய அனுமதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனிப்படைகளைக் கலைக்கும்படி தமிழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிகழாண்டில் 129 போ் உடல் உறுப்புகள் தானம்: 725 பேருக்கு மறுவாழ்வு

தமிழகத்தில் நிகழாண்டில் மூளைச்சாவு அடைந்த 129 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 725 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்ட... மேலும் பார்க்க

34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு, அண்ணாநகர், வேளச்சேரி, அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகள... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்!

காவல் துறை விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் பார்க்க