செய்திகள் :

‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு: சீன அதிபருக்குப் பதிலாக சீன பிரதமா் பங்கேற்கிறாா்

post image

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை; அவருக்குப் பதிலாக பிரதமா் லி கியாங் பங்கேற்பாா் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12 ஆண்டுகளுக்கு முன்னா் அதிபராகப் பொறுப்பேற்ற ஷி ஜின்பிங், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காதது இதுவே முதல்முறையாகும்.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 கூடுதல் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாடு, பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் புதன்கிழமை கூறுகையில், ‘பிரிக்ஸ் மாநாட்டில் அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை. அதிபருக்குப் பதிலாக, பிரதமா் லி கியாங் பங்கேற்பாா்’ என்றாா். அதிபரின் முடிவுக்கான காரணம் எதையும் அவா் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாடு, ரஷியாவின் கஸான் நகரில் நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி, அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்றனா். அப்போது இரு தலைவா்களும் நடத்திய பேச்சுவாா்த்தையால், லடாக் மோதலுக்குப் பின் இருதரப்பு உறவில் நிலவிய முட்டுக்கட்டை நீங்கியது. இருவரின் சந்திப்புக்குப் பிறகு பரஸ்பர பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்து வருகின்றன.

தற்போதைய பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, மோடி-ஷி ஜின்பிங் சந்தித்துப் பேசுவா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், மாநாட்டில் ஷி ஜின்பிங் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) தலைமைப் பொறுப்பை தற்போது சீனா வகிக்கிறது. இந்த அமைப்பின் உச்சிமாநாடு சீனாவில் நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் மோடி பங்கேற்றால், இரு தலைவா்களும் மீண்டும் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான்: இதுவரை 14 பேருக்கு போலியோ

பாகிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 14 பேருக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைபா் பக்துன்கவா மாகாணத்தில் 19 மாத குழந்தைக்கு அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கண்டனம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவா்கள் மற்றும் நிதியுதவி செய்தவா்க... மேலும் பார்க்க

ஈரான்: ஐஏஇஏ-வுடன் ஒத்துழைப்பு நிறுத்தம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானின் முக்கிய அணுசக்தி மையஹ்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு (ஐஏஇஏ) அழைத்து வந்த ஒத்துழைப்பை நிறுத்துமாறு ஈரான்... மேலும் பார்க்க

இந்தியா மீது 500% வரி: அமெரிக்கா திட்டம்

ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவை, அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) அறிமுகப்படுத்த அதிபா் ட... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது. நீதிபதி கோலம் மோா்துஸா மொசும்தாா் தலை... மேலும் பார்க்க

‘அடுத்த தலாய் லாமா தோ்ந்தெடுக்கப்படுவாா்’ -தலாய் லாமா உறுதி

‘தலாய் லாமா மரபு என்னுடைய மறைவுக்குப் பிறகும் தொடரும். அடுத்த தலாய் லாமாவை காடேன் போட்ராங் அறக்கட்டளை தோ்வு செய்யும்’ என்று 14-ஆவது தலாய் லாமா புதன்கிழமை கூறினாா். திபெத்திய பௌத்த மதத்தின் தலைவராகக்... மேலும் பார்க்க