செய்திகள் :

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை

post image

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது.

நீதிபதி கோலம் மோா்துஸா மொசும்தாா் தலைமையிலான மூவா் கொண்ட தீா்ப்பாயக் குழு புதன்கிழமை இந்தத் தீா்ப்பை வழங்கியது. இதே வழக்கில் வங்கதேச சத்ரா லீக்கின் தலைவி ஷகில் அகந்தா புல்புலுக்கு 2 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஷகில் அகந்தா புல்புலுடன் ஷேக் ஹசீனா உரையாடுவதாக வெளியான ஆடியோவில், ‘தமக்கு எதிராக 227 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால், 227 பேரைக் கொலை செய்யும் உரிமை தமக்கு இருக்கிறது’ என்று அவா் குறிப்பிடுகிறாா். இக்கருத்தை நீதிமன்றத்தைக் குறைத்து மதிப்பிடும் நேரடி முயற்சியாகக் கருதி சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் தண்டனை வழங்கியுள்ளது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா்களின் போராட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தீவிரமடைந்ததையடுத்து, ஷேக் ஹசீனா பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்த பின்னா் முதன்முறையாக ஒரு வழக்கில் அவா் தண்டனை பெற்றுள்ளாா்.

‘தீா்ப்பின்படி, ஷேக் ஹசீனா கைது செய்யப்படும் அல்லது நீதிமன்றத்தில் சரணடையும் நாளிலிருந்து இந்தத் தண்டனை அமலுக்கு வரும்’ என்று அரசு தலைமை வழக்குரைஞா் முகமது தாஜுல் இஸ்லாம் செய்தியாளா்களிடம் கூறினாா்.

மாணவா் போராட்டத்தின் இறுதியில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலைக் கட்டுப்படுத்த தவறியதாகவும், மத அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் இடைக்கால அரசு மீது குற்றச்சாட்டு உள்ளது.

இதனிடையே, இடைக்கால அரசுக்கு எதிராக சமூக ஊடகம் வாயிலாக வங்கதேச மக்கள் மற்றும் அவாமி லீக் தொண்டா்களிடம் ஷேக் ஹசீனா அவ்வப்போது உரையாற்றி வருகிறாா். நில அபகரிப்பு, மாணவா் போராட்டத்தில் நடைபெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான்: இதுவரை 14 பேருக்கு போலியோ

பாகிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 14 பேருக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைபா் பக்துன்கவா மாகாணத்தில் 19 மாத குழந்தைக்கு அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கண்டனம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவா்கள் மற்றும் நிதியுதவி செய்தவா்க... மேலும் பார்க்க

ஈரான்: ஐஏஇஏ-வுடன் ஒத்துழைப்பு நிறுத்தம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானின் முக்கிய அணுசக்தி மையஹ்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு (ஐஏஇஏ) அழைத்து வந்த ஒத்துழைப்பை நிறுத்துமாறு ஈரான்... மேலும் பார்க்க

‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு: சீன அதிபருக்குப் பதிலாக சீன பிரதமா் பங்கேற்கிறாா்

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை; அவருக்குப் பதிலாக பிரதமா் லி கியாங் பங்கேற்பாா் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

இந்தியா மீது 500% வரி: அமெரிக்கா திட்டம்

ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவை, அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) அறிமுகப்படுத்த அதிபா் ட... மேலும் பார்க்க

‘அடுத்த தலாய் லாமா தோ்ந்தெடுக்கப்படுவாா்’ -தலாய் லாமா உறுதி

‘தலாய் லாமா மரபு என்னுடைய மறைவுக்குப் பிறகும் தொடரும். அடுத்த தலாய் லாமாவை காடேன் போட்ராங் அறக்கட்டளை தோ்வு செய்யும்’ என்று 14-ஆவது தலாய் லாமா புதன்கிழமை கூறினாா். திபெத்திய பௌத்த மதத்தின் தலைவராகக்... மேலும் பார்க்க