செய்திகள் :

டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பாலியல் வன்கொடுமை! செல்ஃபி எடுத்து மிரட்டல்!

post image

புணேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்து, இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள கோந்த்வா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 22 வயது பெண் தனது சகோதரருடன் வசித்து வந்தார்.

புதன்கிழமை மாலை அவரது சகோதரர் வெளியூர் சென்றிருந்த நிலையில், அந்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 7.30 மணியளவில் அப்பெண்ணின் வீட்டுக்கு வங்கியில் இருந்து கூரியர் வந்துள்ளதாகவும் அதனை டெலிவரி செய்ய வந்திருப்பதாகவும் ஒரு நபர் கூறியுள்ளார்.

இதையடுத்து, கையெழுத்திட பேனா எடுப்பதற்காக அப்பெண் வீட்டுக்குள் சென்ற நிலையில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கதவை உள்புறமாக தாலிட்டுள்ளார்.

அந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து அடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அப்பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்த அந்த நபர், இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவேன் என்று அதில் குறிப்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இரவு 8.30 மணியளவில் மயக்கம் தெளிந்தவுடன் அப்பெண் தனது உறவினருக்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய காவல் ஆணையர் ராஜ்குமார் ஷிண்டே, ”மயக்க மருந்து போன்ற திரவம் பெண்ணின் முகத்தில் அடிக்கப்பட்டதால், அந்த பெண்ணுக்கு நடந்தது பற்றிய சுயநினைவு இல்லை. எந்த மாதிரியான திரவம் அடிக்கப்பட்டது என்பது பற்றி தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 10 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது, குற்றவாளி விரைவில் பிடிபடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

A man entered a house in an apartment complex in Pune and sexually assaulted a young woman.

இதையும் படிக்க : தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம்! பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் மூலம், அதனைத் தூக்கிச் செல்லும் பணி தொடங்கிய... மேலும் பார்க்க

பாகேஷ்வர் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாகேஷ்வர் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியள... மேலும் பார்க்க

மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்ற இந்தியர் திரபித் பன்சாலுக்கு மெட்டா நிறுவனத்தில் ரூ.850 கோடி சம்பளத்துடன் வேலை கிடைக்கப் பெற்றுள்ளது.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவுப் பிரிவில் பணிபுரிய இந்திய வம்சாவளியான த... மேலும் பார்க்க

அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ரவி, எக்ஸ் சமூக வலைதளத்தில், "தொலைநோக்குப் பார்வையும் துடிப்புமிக்க ... மேலும் பார்க்க

25 ஆண்டுகள்.. மைக்ரோசாஃப்ட் மேலாளராக இருந்தவர் பணிநீக்கம்! கலங்க வைக்கும் பதிவு

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. அதில், 25 ஆண்டுகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேலாளராக இருந்தவரும் ஒருவர்.மைக்ரோசா... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம்: உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரி... மேலும் பார்க்க