செய்திகள் :

ரஷியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டம்? இளம்பெண் கைது!

post image

உக்ரைன் சிறப்புப் படை அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ரஷியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, 23 வயது இளம்பெண் ஒருவரை ரஷிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ரஷியாவைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர், அந்நாட்டில் உக்ரைன் சிறப்புப் படையினரின் உத்தரவின்பேரில், பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ரஷிய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, ரஷிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண், உக்ரைனின் சிறப்புப் படை அதிகாரிகளுடன் வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்திலுள்ள பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரை அந்தப் பெண் பின்தொடர்ந்து கண்காணித்து வந்ததுடன், அவரது காரில் ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டை பொறுத்த முயன்றுள்ளார்.

இதையடுத்து, அவர் வெடிகுண்டை பொறுத்தியபோது ரஷிய அதிகாரிகள் அந்தப் பெண்ணை சுற்றிவளைத்து கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், அந்த இளம்பெண் ரஷியாவில் இருந்து வெளியேறி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு நாட்டில் குடியுரிமைப் பெற திட்டமிட்டு, இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், உக்ரைன் ஆதிகாரிகளின் உத்தரவின்படி அந்த இளம்பெண் அங்குள்ள ரயில்வே கட்டமைப்புகள் மீது தீ வைக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, மெட்டா நிறுவனத்தின், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகளின் நடவடிக்கைகள் ரஷியாவில் தீவிரவாதச் செயலாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உணவுக்காக திரண்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 94 பேர் கொலை!

Russian security officials have arrested a 23-year-old woman for allegedly planning to carry out a terrorist attack in Russia on the orders of Ukrainian special forces officers.

உக்ரைன் எல்லையில் ரஷிய கடற்படையின் துணைத் தலைவர் கொலை!

உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் அந்நாட்டு கடற்படையின் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனுடனான போரில், அந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் மேற... மேலும் பார்க்க

சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!

சிகாகோ இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்தக் கொடூரத் தாக்குதலில் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேற்கு சிகாகோ அவென்யூவின் 300-வது பிளாக்கில் உ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் செலவுக் குறைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு! ஆனால் இந்தியாவுக்கு பயன்!

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செலவு மசோதாவால் பல்வேறு நாட்டினர் பயன்பெறவுள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு அறிமுகப்படுத்திய மசோதாவால் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரும் பயனடை... மேலும் பார்க்க

நைல் நதியின் மீதான சர்ச்சை அணையின் கட்டுமானம் நிறைவு! எத்தியோப்பியா அறிவிப்பு!

எகிப்து அரசின் எதிர்ப்பை மீறி நைல் நதியின் மீதான சர்ச்சைக்குரிய நீர்மின் அணையைக் கட்டிமுடித்துள்ளதாக, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அறிவித்துள்ளார். எத்தியோப்பியா நாட்டில் நைல் நதியின் மீது, மின்சார... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: உதவாத சீன ஆயுதங்களால் அமெரிக்காவிடம் தஞ்சம் புகும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் விமானப் படையை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகளுடன் பாகிஸ்தான் விவாதித்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பெரிதும் த... மேலும் பார்க்க

யேமன்: ஹவுதிகளின் தாக்குதலில் ஒருவர் பலி! 14 பேர் படுகாயம்!

யேமன் நாட்டின் தையிஸ் மாகாணத்திலுள்ள எரிபொருள் நிலையத்தின் மீதான ஹவுதிகளின் ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென்மேற்கு மாகாணமான தையிஸில், கதாசி எரிபொருள் நிலைய... மேலும் பார்க்க