செய்திகள் :

யேமன்: ஹவுதிகளின் தாக்குதலில் ஒருவர் பலி! 14 பேர் படுகாயம்!

post image

யேமன் நாட்டின் தையிஸ் மாகாணத்திலுள்ள எரிபொருள் நிலையத்தின் மீதான ஹவுதிகளின் ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தென்மேற்கு மாகாணமான தையிஸில், கதாசி எரிபொருள் நிலையத்தில் அமைந்திருந்த எரிபொருள் கிடங்குகளின் மீது ஹவுதி கிளர்ச்சிப்படையினர், இன்று (ஜூலை 3) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில், அந்த எரிபொருள்கள் வெடித்து ஒருவர் பலியானதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதில், பலரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு யேமனின் அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சிப்படைக்கும் இடையில் கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன.

இதுகுறித்து, யேமனின் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதல் சம்பவத்தினால், அங்கிருந்த குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் தீயால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், உடனடியாக அந்நாட்டு தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து ஹவுதி படைகளின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் யேமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சிப்படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

One person was killed, and 14 others were seriously injured in a Houthi drone attack on a gas station in Yemen's Taiz province.

இதையும் படிக்க: ஜெர்மனியில் 3வது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

காஸாவில் மேலும் 94 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட 94 போ் உயிரிழந்தனா். மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவார... மேலும் பார்க்க

இந்தோனேசியா: படகு விபத்தில் 6 போ் உயிரிழப்பு; 28 போ் மாயம்

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு சென்று கொண்டிருந்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்; 30 போ் கடலில் மாயமாகியுள்ளனா். இது குறித்து என்று மீட்புக் குழு அத... மேலும் பார்க்க

உக்ரைன் எல்லையில் ரஷிய கடற்படையின் துணைத் தலைவர் கொலை!

உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் அந்நாட்டு கடற்படையின் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனுடனான போரில், அந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் மேற... மேலும் பார்க்க

சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!

சிகாகோ இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்தக் கொடூரத் தாக்குதலில் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேற்கு சிகாகோ அவென்யூவின் 300-வது பிளாக்கில் உ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் செலவுக் குறைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு! ஆனால் இந்தியாவுக்கு பயன்!

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செலவு மசோதாவால் பல்வேறு நாட்டினர் பயன்பெறவுள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு அறிமுகப்படுத்திய மசோதாவால் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரும் பயனடை... மேலும் பார்க்க

நைல் நதியின் மீதான சர்ச்சை அணையின் கட்டுமானம் நிறைவு! எத்தியோப்பியா அறிவிப்பு!

எகிப்து அரசின் எதிர்ப்பை மீறி நைல் நதியின் மீதான சர்ச்சைக்குரிய நீர்மின் அணையைக் கட்டிமுடித்துள்ளதாக, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அறிவித்துள்ளார். எத்தியோப்பியா நாட்டில் நைல் நதியின் மீது, மின்சார... மேலும் பார்க்க