மதகுகள் வழியாக சீறி பாயும் நீர்; பிரம்மிப்பூட்டும் மேட்டூர் அணை - சிறப்பு புகைப்...
பரமசிவன் பாத்திமா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
பரமசிவன் பாத்திமா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விமல் நடிப்பில் லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பரமசிவன் பாத்திமா. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் விமலுடன் சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், கூல் சுரேஷ், காதல் சுகுமார், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் நடித்துள்ளனர்.

மத பிரிவினைக் கொண்ட கிராமத்தில் நாயகன், நாயகி சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் இசக்கி கார்கண்ணன் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், பரமசிவன் பாத்திமா திரைப்படம் நாளை(ஜூலை 4) ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.