140 கோடி மக்களில் ஒருவராக... கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடுவீடாகச் சென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களைச் சந்தித்து வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசார இயக்கத்தை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் ’ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடக்கிவைத்து, வீடுவீடாகச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மக்களை சந்தித்தார்.
முதல்வருடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார மையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதனிடையே, தமிழக அமைச்சர்கள், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் அவரவர் பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து ’ஓரணியில் தமிழ்நாடு’ பிரசார இயக்கத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கையையும் நடத்தி வருகின்றனர்.
Tamil Nadu Chief Minister M.K. Stalin is visiting people from house to house in Alwarpet, Chennai.