செய்திகள் :

ஹார்ட் பீட் - 2 வெப் தொடரில் திடீர் திருப்பம்! நடக்கப்போவது என்ன?

post image

ஹார்ட்பீட் - 2 வெப் தொடர் கதையில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில், கதை தொடர்ந்து சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் வெப் தொடர் ஹார்ட்பீட் - 2.

ஹார்ட் பீட் முதல் பாகத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வெப் தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, பாடினி குமார், யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் - மகள் இருக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் ஆகியவற்றை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.

இத்தொடரின் கதையின்படி அனுமோலின்(ரதி) மகளான தீபா பாலுவை(ரீனா) குழந்தையாக இருக்கும்போது ரதி காப்பகத்தில் விட்டு விடுகிறார். பின்னர் வேறொருவரை ரதி திருமணம் செய்துகொள்கிறார்.

இந்த நிலையில் ரீனாவின் தந்தை அறிமுகமாகும் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளன. இதனால் ரீனா மற்றும் ரதியின் கடந்த கால வாழ்க்கை தெரிய வரும்.

ரீனாவின் தந்தை டாக்டர் விஜய் பாத்திரத்தில் அறிமுகமாகவுள்ளதால், இந்தத் தொடரின் விறுவிறுப்பு மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளேக்பேக் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதால் இத்தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஹார்ட் பீட் வெப் தொடரின் இரண்டாம் பாகம் மே 22 முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் 4 எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

With a sudden twist in the Heartbeat - 2 web series, the story is expected to continue to heat up.

இதையும் படிக்க:

கூலி - அமீர் கான் போஸ்டர்!

கூலி திரைப்படத்திற்கான அமீர் கானின் முதல் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட... மேலும் பார்க்க

நரிவேட்டை ஓடிடி தேதி!

நரிவேட்டை படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டொவினோ தாமஸ் நடிப்பில், இயக்குநர் அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உருவான அரசியல் ஆக்‌ஷன் திரைப்படமான ‘நரிவேட்டை’ கடந்த மே.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெள... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்த... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃப்ரீடம் டிரைலர்!

சசிகுமார் நடிப்பில் உருவான ஃப்ரீடம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14’எனப் பெயரி... மேலும் பார்க்க

சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கேட்ட கௌதம் ராம் கார்த்திக்..!

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் தன் மீதான் சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கேட்டு, அதற்கான விளக்கமும் அளித்துள்ளார். நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் சமீபத்தில் தனது பெயரை கௌதம் ராம் கார்த்திக் என ம... மேலும் பார்க்க