செய்திகள் :

பறந்து போ: "மிடில் கிளாஸ் பெற்றோர்தான் போராளிகள்" - ராமின் பாஸிட்டிவ் பதில்கள்!

post image

ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'.

இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. சிறப்புக் காட்சியில் படம் பார்த்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கலகலப்பாக பதிலளித்தார் இயக்குநர் ராம்.

ராம்

குழந்தைகள் பேசுவது சென்சாரில் பிரச்னையாகிடும்...

பறந்து போவில் 8 வயது குழந்தை கெட்ட வார்த்தை பேசும் காட்சிக்கு, "இன்னைக்கு 9 வயசு பசங்க பேசுறத படத்தில் வைத்தால் சென்சாரில் பிரச்னையாகிவிடும். இந்த ஜெனரேஷன் குழந்தைங்க நம்ம கற்பனைக்கு அப்பாற்பட்டு பேசுறாங்க" என பதிலளித்தார்.

"விபத்துகள் விதி விலக்குகள்தான்" - பாஸிட்டிவ் பதில்!

"சிவா முகத்தில் எப்போ ஜோக் அடிக்கிறார், எப்போ சீரியஸாக பேசுகிறார் என கண்டுபிடிக்கவே முடியாது. சுலபமாக ஏமாற்றிவிடுவார்... இந்த படத்தில் நடித்ததால் அவருக்கு உடம்பு குறைந்திருக்கிறது. அதற்கு அவர் எனக்கு தனியாக பணம் தர வேண்டும்" என நகைச்சுவையாக பதிலளித்தார் ராம்.

பறந்து போ

படத்தில் நெகட்டிவ் கேரக்டரே இல்லையே, அந்த பையன் ஓடும்போது யாரும் கடத்திட்டு போயிருவாங்களோன்னு தோன்றியது... எனக் கேட்டபோது, "நிஜ வாழ்க்கையில் காணாமல் போகும் குழந்தைகள் திரும்ப வந்துவிடுகிறார்களே. இப்போதெல்லாம் நாம் மொபைலில் ஒரு சிசிடிவி காட்சியைப் பார்த்தாலே அதில் விபத்து ஏற்படும் என நினைக்கிறோம். சாதாரணமானவற்றைப் பொருட்படுத்துவதே இல்லை. பெரும்பாலும் இங்கு நெகடிவ்வாக நடப்பது இல்லை, விபத்துகள் விதி விலக்குகள்தான்" என்றார்.

ஊர்வசி மேடம் மாதிரி ஒரு கதாநாயகி!

வசனம் மற்றும் பாடல்களில் இருந்த ஆங்கில கலப்பு குறித்த கேள்விக்கு, "இன்றைய 8 வயது குழந்தையின் மனதில் ஆங்கில வார்த்தைகள் இருப்பதனால் படத்தில் ஆங்கிலம் அதிகம் இருக்கிறது. தமிழ் பிறமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய மொழிதான். ஆங்கிலமே சுத்தமான மொழி இல்லை. நாம் சொல்லும் கட்டுமரம்தான் அங்கே Catamaran. மாங்கா தான் mango." என பதிலளித்தார் ராம்.

பறந்து போ

மேலும், "முருகரா (கடவுள்) இருந்தாலும் சரி, அன்புவா (படத்தில் வரும் கதாப்பாத்திரம்) இருந்தாலும் குழந்தைகளுக்கு மலையேறுவதில் எப்போதும் விருப்பம் இருக்கும். இந்த படத்தில் "இவனுக்கு அன்புன்னு பெயர் வச்சதுக்கு ஆறுமுகம்னு வச்சிருக்கலாம், மலையைப் பார்த்தாலே ஏறிடுறான்" என ஒரு வசனம் இருந்தது. அதைத் தூக்கிவிட்டோம்." என்றார்.

கதாநாயகி கிரேஸ் ஆண்டனி குறித்து, "எனக்கு ஊர்வசி மேடம் ரொம்ப பிடிக்கும். மகளிர் மட்டும்ல இருந்து பல படங்களில் அவங்களை ரசிச்சிருக்கோம். எனக்கு சின்ன வயசு ஊர்வசி மேடம் தேவைப்பட்டாங்க. இவங்களை அப்பன்னு ஒரு படத்தில் பார்க்கும்போது இவங்களோட நகைச்சுவை, மேனரிசம் எல்லாமும் புதுசா ஒரு ஊர்வசி மேடம் கிடச்ச மாதிரி இருந்தது."

மிடில்கிளாஸ் பெற்றோர்தான் போராளிகள்!

"மிடில் கிளாஸ் பெற்றோர் மாதிரி உழைக்கக் கூடியவங்க யாரும் இல்லை... ஒரு இரவில் இவ்வளவு கடன், வாடகை எப்படி கொடுக்கப் போறோம், இன்னைக்கு யார் அவமானப்படுத்தி பேசியது, ஸ்கூல்ல பசங்களைப் பற்றி என்ன சொன்னாங்க, டியூசன் சேர்க்கலாமா வேண்டாமா போன்ற விஷயங்களைத்தான் பேசுகிறார்கள்... அவர்கள்தான் நிஜ போராளிகள். இந்த படம் சொல்லவருவது என்னவென்றால் உங்களுக்கு இருக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் நடுவில் வாழ்க்கையை கொண்டாடுங்கள். அதைத்தான் அந்த பையன் அவங்க அப்பா அம்மாவுக்கு உணர்த்துறான். படத்தின் கதை நகரத்தில் இருந்து கிராமத்துக்கு போங்க என சொல்வது இல்லை." என்றார்.

Vijay: "உங்கள் ஆதரவை மறக்க முடியாது" - விஜய் சந்திப்பு பற்றி சூர்யா சேதுபதி நெகிழ்ச்சி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன், சூர்யா சேதுபதி நடிப்பில் பீனிக்ஸ் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. சண்டைப் பயிற்சி இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்து... மேலும் பார்க்க

Phoenix: ``தமிழ் சினிமாவுக்கு 10 ஹீரோக்கள் கெடச்சுருக்காங்க..."- தயாரிப்பாளர் டி.சிவா

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’.சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்... மேலும் பார்க்க

Priyamani: "நடிப்பிற்காக நான் ஹோம்வொர்க் செய்யமாட்டேன்..!" - பட நிகழ்வில் ப்ரியாமணி

நடிகை ரேவதி இயக்கத்தில் ப்ரியாமணி, ஆரி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் சீரிஸ் 'குட் வைஃப்'. 'தி குட் வைஃப்' எனப்படும் ஆங்கில வெப் சீரிஸின் ரீமேக்காக இதை எடுத்திருக்கிறார்கள். ஜூலை 4-ம் தேதி இந்த ச... மேலும் பார்க்க

Parandhu Po: 'அழுதாங்க ஆனா சிரிச்சு சிரிச்சு அழுதாங்க' - இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'. இத்திரைப்படம் நாளை(ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நி... மேலும் பார்க்க

``திருபுவனம் அஜித்குமார் மரணம் மாதிரி இந்தப் படத்திலும் ஒரு கதை" - 'பீனிக்ஸ்' குறித்து ஆர்த்தி கணேஷ்

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில், சூர்யா சேதுபதி நடிப்பில் உருவான 'பீனிக்ஸ்' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி நாளை வெளியாகிறது. இந்தப் படத்துக்கான பிரஸ் ஷோ நேற்று திரையிடப்பட்டது. இந்த திரையிடலில், சினி... மேலும் பார்க்க

Paranthu Po: 'குழந்தைகள், சூரியகாந்திப் பூ, ராம்!' - 'பறந்து போ' படத்தின் சிறப்பு திரையிடல்!

இயக்குநர் ராமின் 'பறந்து போ' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. 'மை விகடன்' என்ற களம் மூலம் விகடன் வாசகர்கள் தொடர்ந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகின்றனர். கட... மேலும் பார்க்க