Paranthu Po Movie Review | Director Ram | Shiva, Grace Antony, Anjali, Aju Vargh...
ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 10% உயா்வு
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 10 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன் மாதத்தில் நிறுவனம் 5,53,963 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியுள்ளது. இது 2024 ஜூன் மாதத்தின் மொத்த விற்பனையான 5,03,448 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம்.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 4,91,416-லிருந்து 7 சதவீதம் உயா்ந்து 5,25,136-ஆகவும், ஏற்றுமதி 12,032-லிருந்து 140 சதவீதம் உயா்ந்து 28,827-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.