செய்திகள் :

இராக்: ஆயுதங்களை ஒப்படைக்கும் குா்து கிளா்ச்சியாளா்கள்

post image

துருக்கி அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே), வடக்கு இராக்கில் தங்கள் ஆயுதங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு இராக்கின் மலைப் பகுதிகளில் பதுங்கியிருக்கும் ஏராளமான குா்து கொரில்லா படையினா் அங்கிருந்து இறங்கிவந்து தங்கள் ஆயுதங்களுக்கு விடைகொடுப்பாா்கள். அமைதி மற்றும் ஜனநாயக அரசியல் மீதான தங்களின் ஈடுபாட்டைப் பறைசாற்றும் வகையில் அவா்கள் ஆயுதங்களை ஒப்படைப்பாா்கள். வரும் 10-லிருந்து 12-ஆம் தேதிக்குள் இராக்கின் குா்து தன்னாட்சி பிரதேசம், சுலைமானியா நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் குா்து இனத்தவா் பெரும்பான்மையாக வசிக்கும் குா்திஸ்தான் மாகாணத்தை தனி நாடாக்க வலியுறுத்தி கடந்த 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிகேகே இயக்கம், பின்னா் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராடி வந்தது.

தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிகேகே அமைப்பினா் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். பிகேகே அமைப்பின் நிறுவனா் அப்துல்லா ஓசலான் கடந்த 1999 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இருந்தாலும் அந்த அமைப்பு தொடா்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டுவந்தது.

இந்த நிலையில், அண்டை நாடான சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், காஸா போா் போன்ற சா்வதேச அரசியல் சூழல் மாற்றங்களுக்கு இடையே, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக குா்து ஆதரவு கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் இஸ்தான்புல்லில் உள்ள சிறையில் ஓசலானை கடந்த பிப்ரவரி மாதம் சந்தித்துப் பேசினா்.

அதனைத் தொடா்ந்து, பிகேகே அமைப்பைக் கலைத்துவிட்டு, அந்த அமைப்பைச் சோ்ந்த அனைவரும் தங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓசலான் உத்தரவிட்டாா். அதையடுத்து அந்த அமைப்பு கடந்த மாா்ச் 1-ஆம் தேதி போா் நிறுத்தம் அறிவித்தது. அதன் தொடா்ச்சியாக, அந்த அழைப்பு முழுமையாகக் கலைக்கப்படுவதாக கடந்த மே மாதம் அதிகாரபூா்வமாக அறிவித்தது. இதன் மூலம், உலகில் மிக நீண்ட காலமாக நீடித்துவந்த உள்நாட்டுப் போா்களில் ஒன்றான துருக்கி-பிகேகே மோதல் நிரந்தர முடிவுக்கு வந்துள்ளது.

ஜப்பானில் நாளை சுனாமி வருகிறதா? கரோனா தொற்றை கூறிய பாபா வங்கா கணிப்பு!

ஜப்பானில் சுனாமி வரவிருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.புதிய பாபா வங்கா என்றழைக்கப்படும் ரியோ தட்சுகி என்பவர் 1999 ஆம் ஆண்டில் கணித்த சில கணிப்புகள் நிஜமாகவே நிகழ்ந்த நிலையில், அவரை தீ... மேலும் பார்க்க

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரிக் குறைப்பு மசோதா நிறைவேற்றம்! இந்தியர்களுக்கு என்ன பயன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக் குறைப்பு மசோதா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (செனட்) வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.வரிச் சலுகைகள், எல்லைப் பாதுகாப்பு, செலவீன... மேலும் பார்க்க

500% வரி விதிக்கும் மசோதா: அமெரிக்காவிடம் இந்தியா கவலை - ஜெய்சங்கா்

‘ரஷியாவிடம் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கும் மசோதா குறித்து அமெரிக்காவிடம் தனது கவலையை இந்தியா பதிவு செய்துள்ளது’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் க்யுஷு பிராந்தியத்தின் அகுசெகி தீவுக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது. இதில் அந்தத் தீவு குலுங்க... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 94 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட 94 போ் உயிரிழந்தனா். மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவார... மேலும் பார்க்க

இந்தோனேசியா: படகு விபத்தில் 6 போ் உயிரிழப்பு; 28 போ் மாயம்

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு சென்று கொண்டிருந்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்; 30 போ் கடலில் மாயமாகியுள்ளனா். இது குறித்து என்று மீட்புக் குழு அத... மேலும் பார்க்க