செய்திகள் :

நேரடியாக ஓடிடியில் வெளியான கீர்த்தி சுரேஷின் புதிய படம்!

post image

கடந்த ஓராண்டாக வெளியாகாமல் இருந்த கீர்த்தி சுரேஷின் உப்பு காப்புரம்பு படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

அனி ஐ.வி.சசி இயக்கிய இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைமில் இன்று (ஜூலை 4) வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் சுஹாஸ், சுபலேகா சுதாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு வசந்த் மரிங்கதி கதை எழுதியுள்ளார். இவர் ஏற்கெனவே, சினிமா பண்டி, சுபம் ஆகிய படங்களுக்கும் கதை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

தமிழில் இது என்ன மாயம் படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு டிசம்பரில் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்தார். அவரது நடிப்பில் கன்னிவெடி, ரிவால்வர் ரீட்டா படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.

Uppu Kappurambu is a Telugu web movie featuring Keerthy Suresh and Suhas in the lead roles. Directed by Ninnila Ninnila fame Ani I.V. Sasi, the film is now available on Amazon Prime Video and is streaming in multiple languages. Read our review to find out how it fares.

முத்த மழை - சின்மயி விடியோ வடிவம் வெளியீடு!

சின்மயி பாடிய முத்த மழை பாடலின் விடியோ வடிவம் வெளியானது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜுன். 5 ஆம் தேதி வெளியானது.படத்தின் கதை ம... மேலும் பார்க்க

செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!

தமிழக வீரர் டி. குகேஷிடம் மீண்டும் ஒருமுறை மாக்னஸ் கார்ல்செனை தோல்வியுற்றார். அதன்பிறகு அளித்த பேட்டியில், “செஸ் விளையாட பிடிக்கவில்லை” என கார்ல்சென் கூறியது கவனம் ஈர்த்துள்ளது. குரேஷியாவில் நடைபெறும்... மேலும் பார்க்க

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களை அடுத்தடுத்த வெளியீடாக வைத்திருக்கிறார்.... மேலும் பார்க்க

கால்பந்துக்கு டென்னிஸ் மரியாதை: 148 ஆண்டுகால விதியை மாற்றியதா விம்பிள்டன்?

லிவர்பூல் கிளப் கால்பந்து அணியின் வீரர் தியாகோ ஜோடா உயிரிழந்த சம்பவத்திற்காக அந்நாட்டு வீரருக்கு கறுப்புப் பட்டை அணிய தனது 148 ஆண்டுகால விதியை விம்பிள்டன் மாற்றிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. போர்ச்... மேலும் பார்க்க

ஓடிடியில் மெட்ராஸ் மேட்னி!

காளி வெங்கட் நடித்த மெட்ராஸ் மேட்னி திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.நடிகர்கள் சத்யராஜ், காளி வெங்கட் கூட்டணியில் ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் கடந்த ஜூன் 6 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகியத... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி மகனை வாழ்த்திய விஜய்!

நடிகர் விஜய் திரைத்துறைக்கு அறிமுகமான நடிகர் விஜய் சேதுபதியின் மகனை வாழ்த்தியுள்ளார்.நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ‘பீனிக்ஸ்’ படம் மூலம் நாயகனாக சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் இன்... மேலும் பார்க்க