விஜய் சேதுபதி மகனை வாழ்த்திய விஜய்!
நடிகர் விஜய் திரைத்துறைக்கு அறிமுகமான நடிகர் விஜய் சேதுபதியின் மகனை வாழ்த்தியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ‘பீனிக்ஸ்’ படம் மூலம் நாயகனாக சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஆக்சன் திரில்லர் படமாக உருவான இது ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அறிமுகப்படமாக மோசமில்லை என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தன் முதல் படத்திற்காக நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த சூர்யா சேதுபதி வாழ்த்துகளைப் பெற்றுள்ளார்.
Thank you @actorvijay sir.
— Surya sethupathi (@suryaVoffcial) July 3, 2025
The last hug, the kind words, the warmth and it meant everything. I’ve always looked up to you, and to feel your support on this journey is something I’ll never forget. #ThalapathyVijay ❤️ #Phoenixpic.twitter.com/B8t8EWxukO
இதுகுறித்து பதிவிட்ட சூர்யா, “உங்களின் கனிவான வார்த்தைகளுக்கும், இறுதியாகக் கட்டியணைத்தற்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கேலிகளைத் தாண்டி வென்றாரா சூர்யா சேதுபதி? பீனிக்ஸ் திரை விமர்சனம்