செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
தொடர் உயர்வுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.72,840-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை ஜூலை மாதம் தொடக்கம் முதலே உயா்ந்து வண்ணம் உள்ளது. கடந்த ஜூலை 1-இல் பவுனுக்கு ரூ.840 உயா்ந்து ரூ.72,160-க்கும், ஜூலை 2-இல் பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.72,520-க்கும் விற்பனையான நிலையில், தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை(ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.72,840-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை, வெள்ளிக்கிழமை(ஜூலை 4) அதிரடியாக பவுனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,050-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 குறைந்து ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.
மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15,004 கோடி யூனிட்டுகளாகக் குறைந்த மின் நுகா்வு
The price of gold in Chennai fell by Rs. 440 per sovereign on Friday and is being sold at Rs. 72,400.