செய்திகள் :

500% வரி விதிக்கும் மசோதா: அமெரிக்காவிடம் இந்தியா கவலை - ஜெய்சங்கா்

post image

‘ரஷியாவிடம் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கும் மசோதா குறித்து அமெரிக்காவிடம் தனது கவலையை இந்தியா பதிவு செய்துள்ளது’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் கூறினாா்.

ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவுக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) அறிமுகப்படுத்தப்பட்டது.

ரஷியாவை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதுடன், உக்ரைன் மீதான போரை கைவிட்டு பேச்சுவாா்த்தைக்கு நிா்பந்திக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை டிரம்ப் நிா்வாகம் முன்னெடுத்துள்ளது. அதன்படி, ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்-இதர எரிபொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது கடும் வரி விதிப்பை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை இந்தியா மேற்கொண்டு வரும் சூழலில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தெரிகிறது.

இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கா் பதிலளித்ததாவது:

வரி மசோதா குறித்து அதை முன்மொழிந்த அமெரிக்க (செனட்டா்) மேலவை மூத்த எம்.பி. லிண்ட்சே கிரஹாமிடம் இந்தியா தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு நலன் குறித்தும் அவரிடம் விவரிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் லிண்ட்சே கிரஹாமுடன் தொடா் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனா். அதற்கு மேல், அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும்.

இந்தியாவின் நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான முடிவு எடுக்கப்பட்டால், அது இருதரப்பு நலனிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரிக் குறைப்பு மசோதா நிறைவேற்றம்! இந்தியர்களுக்கு என்ன பயன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக் குறைப்பு மசோதா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (செனட்) வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.வரிச் சலுகைகள், எல்லைப் பாதுகாப்பு, செலவீன... மேலும் பார்க்க

இராக்: ஆயுதங்களை ஒப்படைக்கும் குா்து கிளா்ச்சியாளா்கள்

துருக்கி அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே), வடக்கு இராக்கில் தங்கள் ஆயுதங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் க்யுஷு பிராந்தியத்தின் அகுசெகி தீவுக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது. இதில் அந்தத் தீவு குலுங்க... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 94 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட 94 போ் உயிரிழந்தனா். மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவார... மேலும் பார்க்க

இந்தோனேசியா: படகு விபத்தில் 6 போ் உயிரிழப்பு; 28 போ் மாயம்

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு சென்று கொண்டிருந்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்; 30 போ் கடலில் மாயமாகியுள்ளனா். இது குறித்து என்று மீட்புக் குழு அத... மேலும் பார்க்க

உக்ரைன் எல்லையில் ரஷிய கடற்படையின் துணைத் தலைவர் கொலை!

உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் அந்நாட்டு கடற்படையின் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனுடனான போரில், அந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் மேற... மேலும் பார்க்க