செய்திகள் :

``திருபுவனம் அஜித்குமார் மரணம் மாதிரி இந்தப் படத்திலும் ஒரு கதை" - 'பீனிக்ஸ்' குறித்து ஆர்த்தி கணேஷ்

post image

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில், சூர்யா சேதுபதி நடிப்பில் உருவான 'பீனிக்ஸ்' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி நாளை வெளியாகிறது. இந்தப் படத்துக்கான பிரஸ் ஷோ நேற்று திரையிடப்பட்டது. இந்த திரையிடலில், சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்த்தி கணேஷ் பீனிக்ஸ் திரைப்படம் குறித்து செய்தியாளர்களிடம், ``திருபுவனம் அஜித்குமார் மரணம் மாதிரி இந்தப் படத்திலும் ஒரு கதை இருக்கு. பணக்காரங்களோட சின்ன ஈகோ ஏழைகள் உயிரை எப்படி வாங்குறதுங்கிறதுதான் கதை. இந்தப்படம் பார்க்கும்போது, கைய உடைச்சி, கால உடைச்சி, மிளகாய் பொடியெல்லாம் போட்டுன்னு... நாம அந்த இடத்துல இல்லைனாலும் அந்த சில நிமிட காட்சி ரொம்ப கஷ்டமா இருந்தது.

ஆர்த்தி கணேஷ்

அதுக்கு பழிவாங்குற காட்சியிலதான் படம் நிறைய கைதட்டல் வாங்குது. படம் ரொம்ப நல்லா இருந்தது. சூர்யா சேதுபதிக்கு இது முதல் படம் மாதிரியே தெரியல. டான்ஸ், பைட்னு சூப்பரா கலக்கியிருக்காரு. இசையும் சூப்பரா வந்துருக்கு.மொத்த டீமுக்கும் வாழ்த்துகள்." எனப் பகிர்ந்து கொண்டார்.

இந்தப் படத்தை இயக்கிய அனல் அரசு, ``இந்தப் படத்துக்காக சூர்யா சேதுபதியை ஒன்றரை வருஷம் ரெடி பண்ணேன். உடல் எடையை இந்தப் படத்துக்காக குறைச்சார். ஷூட்டுக்கு முன்னாடி ஹார்டு வொர்க் பண்ணதால, எங்களுக்கு ஷூட் நேரத்துல எந்தப் பிரச்னையும் வரல.

இந்தப் படம் இரண்டாம் பாகத்துக்கான லீடு கொடுக்கல. இது never end story. காலம்தான் அடுத்து நடக்கப்போறதை முடிவு பண்ணும். எல்லாருக்கும் இந்தப் படம் புடிக்கும். மக்கள்தான் எங்களுக்கு சப்போர்ட் பண்ணனும்" என்றார்.

சூர்யா சேதுபதி - அனல் அரசு

இந்தப் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் முத்துக்குமார், ``இந்தப் படத்தில் எல்லா கதாபாத்திரம் சாகும் போதும் வருத்தப்படுறாங்க. நான் சாகும் இடம் வரும்போது எல்லாரும் சந்தோஷப்பட்டு கைதட்டி கொண்டாடுறாங்க.

அப்படியான கதாப்பரத்திரம் அது. மிகச் சிறப்பான கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எல்லா எமோஷனலும் கலந்து படம் சிறப்பா வந்திருக்கு. இந்தப் படத்தில் நடித்த எல்லாருக்கும் வாழ்த்துகள்."என்றார்.

Vijay: "உங்கள் ஆதரவை மறக்க முடியாது" - விஜய் சந்திப்பு பற்றி சூர்யா சேதுபதி நெகிழ்ச்சி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன், சூர்யா சேதுபதி நடிப்பில் பீனிக்ஸ் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. சண்டைப் பயிற்சி இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்து... மேலும் பார்க்க

Phoenix: ``தமிழ் சினிமாவுக்கு 10 ஹீரோக்கள் கெடச்சுருக்காங்க..."- தயாரிப்பாளர் டி.சிவா

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’.சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்... மேலும் பார்க்க

பறந்து போ: "மிடில் கிளாஸ் பெற்றோர்தான் போராளிகள்" - ராமின் பாஸிட்டிவ் பதில்கள்!

ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. சிறப்புக் காட்சியில் படம் பார்... மேலும் பார்க்க

Priyamani: "நடிப்பிற்காக நான் ஹோம்வொர்க் செய்யமாட்டேன்..!" - பட நிகழ்வில் ப்ரியாமணி

நடிகை ரேவதி இயக்கத்தில் ப்ரியாமணி, ஆரி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் சீரிஸ் 'குட் வைஃப்'. 'தி குட் வைஃப்' எனப்படும் ஆங்கில வெப் சீரிஸின் ரீமேக்காக இதை எடுத்திருக்கிறார்கள். ஜூலை 4-ம் தேதி இந்த ச... மேலும் பார்க்க

Parandhu Po: 'அழுதாங்க ஆனா சிரிச்சு சிரிச்சு அழுதாங்க' - இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'. இத்திரைப்படம் நாளை(ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நி... மேலும் பார்க்க

Paranthu Po: 'குழந்தைகள், சூரியகாந்திப் பூ, ராம்!' - 'பறந்து போ' படத்தின் சிறப்பு திரையிடல்!

இயக்குநர் ராமின் 'பறந்து போ' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. 'மை விகடன்' என்ற களம் மூலம் விகடன் வாசகர்கள் தொடர்ந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகின்றனர். கட... மேலும் பார்க்க