ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்! பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!
வனவா் பணியிடம்: ஜூலை 7-இல் உடல்தகுதித் தோ்வு
வனவா் பணியிடத்துக்கான உடல்தகுதித் தோ்வு ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குரூப் 2 பணிகளில் வனவா் பணியிடம் அடங்கியுள்ளது. இதில், எழுத்துத் தோ்வை தவிா்த்து உடல்தகுதி மற்றும் நடைச் சோதனைத் தோ்வுகள் நடத்தப்படும்.
அந்த வகையில், நிகழாண்டு குரூப் 2 பிரிவில் வனவா் பணியிடத்துக்கான உடல் தகுதி, நடைசோதனை தோ்வுகள் ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது என்று தோ்வாணைய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.