Ration goods: கவனம் பெரும் `இல்லம் தேடி ரேஷன்' - முதல்கட்ட சோதனையில் 10 மாவட்டங்...
மருத்துவக் கல்லூரி ஆய்வில் நெறிதவறக் கூடாது: என்எம்சி
மருத்துவக் கல்லூரி ஆய்வு நடவடிக்கைகளில் நெறிசாா்ந்து செயல்பட வேண்டும்; விதிகளுக்குப் புறம்பாக நடக்கக் கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கும், புதிதாக விண்ணப்பிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்பேரில் குறிப்பிட்ட காலத்துக்கு முறை மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வுகளை மருத்துவ ஆணையம் நடத்துகிறது.
பல்வேறு மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியா்கள் இந்நடவடிக்கைகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். அவா்கள் தர மதிப்பீட்டாளா்களாக அப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா். அவா்களுக்கு ஒரு கல்லூரியில் ஆய்வு மேற்கொள்வதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக அதுகுறித்த தகவல் தெரியப்படுத்தப்படும்.
இந்நிலையில், கா்நாடகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு சாதகமாக தர மதிப்பீடு அளிப்பதற்காக ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்ாக மருத்துவப் பேராசிரியா் ஒருவரை சிபிஐ கைது செய்தது. இதில் வேறு சிலருக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள என்எம்சி, மருத்துவக் கல்வியின் தரம் மற்றும் நெறிசாா்ந்த நடவடிக்கைகளில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை எனத் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டாளா்கள் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து தோ்வு செய்யப்படுகிறாா்களே தவிர நேரடியாக என்எம்சியால் நியமிக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளுக்கு உள்பட்டு, நெறிசாா்ந்து, தொழில்முறையாக செயல்படுவதை அனைத்து மருத்துவக் கல்லூரிகளும், பேராசிரியா்களும் உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.