குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி அறிவி...
Parandhu Po: 'அழுதாங்க ஆனா சிரிச்சு சிரிச்சு அழுதாங்க' - இயக்குநர் ராம்
இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'. இத்திரைப்படம் நாளை(ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று(ஜூலை 3) செய்தியாளர்களுக்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. அதன் பிறகு படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

முதலில் பேசிய மிர்ச்சி சிவா, “ எதிர்பார்த்ததைவிட எல்லோரும் நன்றாக சிரிச்சுப் பார்த்தீங்க. ‘சென்னை 28’ படத்துல இருந்தே உங்களுடன் ஒரு கனெக்ட் இருக்கு. இன்னைக்கு இந்தப் படத்தைப் பார்த்த எல்லோரும் என்கிட்ட சொன்னது என்னென்னா? நான் முதல் படம் நடிச்ச மாதிரி உணர்ந்தேன்’னு சொன்னாங்க” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் ராம், “ இந்தப் படம் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்’னு என நினைச்சேன். அதே மாதிரி சந்தோஷப்படுத்திருச்சு. இந்தப் படத்துல எல்லோரும் அழுதாங்க. ஆனா சிரிச்சு சிரிச்சு அழுதாங்க" என்றிருக்கிறார்.

தொடர்ந்து உங்கள் மகனை ஏன் நடிக்க வைக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியதற்கு , " நம்ம பையன நடிக்க வைக்க படம் எடுக்கல. நல்ல பையன நடிக்க வைக்கத்தான் படம் எடுக்கிறோம்" என்று ராம் பதிலளித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...