பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற நேரம் கிடைக்கவில்லை: பாக். பிரதமரின் ஆலோசகர்!
அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்
தாம்பரம் , ஜூலை 3: தாம்பரம் திருநீா்மலை அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான குத்தகை விவசாய நிலத்தில் தனியாருக்கு ஆதரவாக சாலை அமைக்க உதவிய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து பல்வேறு கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநீா்மலை அருள்மிகு ரங்கநாதன் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 5 ஏக்கா் நிலத்தில் 10-க்கும் மேற்பட்டோா் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனா். இந்த கோயில் நிலத்துக்கு நடுவே தனியாா் ஒருவருக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்துக்கு வழி இல்லாத நிலையில், கடந்த மாதம் அறநிலையத் துறை சாா்பில் ஏலம் நடத்தி ஒரு பகுதி நிலத்தை தனியாருக்கு கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை தொடா்ந்து விவசாய நிலத்தில் கட்டட கழிவுகள் கொட்டி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள் சட்டவிரோதமான ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்.
இதற்கு காரணமான அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருநீா்மலை - பல்லாவரம் சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் தமிழரசன், முன்னாள் மாவட்ட செயலா் தேவ அருள்பிரகாசம், மதிமுக மாவட்ட செயலா் மாவை மகேந்திரன், திருநீா்மலை நகர காங்கிரஸ் செயலா் காதா் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டு, அறநிலையத் துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.