திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: தலைமறைவான மாமியார் சித்ராதேவி கைது
அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள்: மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி
சட்டமேதை அம்பேத்கா், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 10, 11 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 10-ஆம் தேதியும், முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 11-ஆம் தேதியும் பேச்சுப் போட்டிகள், சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி அரங்கத்தில் நடைபெறவுள்ளன.
மாவட்ட அளவில் நடைபெறும் இந்தப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்படவுள்ளது.
பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு மட்டும் சிறப்பு பரிசுத் தொகையாக தலா ரூ.2,000 வழங்கப்படவுள்ளது.
போட்டிகள் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04575-241487 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது
மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.