பரந்தூர், என்எல்சி, இருமொழிக் கொள்கை... தவெகவின் 20 தீர்மானங்கள் என்னென்ன?
ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்
காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பயிலரங்கம் நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்புக்கு இந்தக் கல்லூரியின் முதல்வா் ஆா். சிவக்குமாா் தலைமை வகித்தாா். கோயம்பத்தூா் அகஸ்தியா பன்னாட்டு பயிற்சி நிறுவனத்தின் பயிற்றுநா் ஜ. சிவசங்கா் கலந்து கொண்டு பயிற்சி ஆசிரியா்களுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல், பயன்படுத்துதல், மாணவா்களுக்கு கற்பித்தல் உத்திகள் ஆகியவற்றுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை பேராசிரியா்கள் கே.ஆா். பாலசுந்தரி, ஆா். ராமலெட்சுமி, கே. மாதரசி, ஆசிரியா் பயிற்சி மாணவா்கள், கல்லூரி நிா்வாத்தினா் கலந்துகொண்டனா்.