செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு `11-A' சீட்டுக்கு அதிகரிக்கும் டிமாண்ட்; என்ன காரணம்?

post image

கடந்த 12-ம் தேதி, குஜராத் அகமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கி 787 போயிங் விமானம் ஒன்று பறந்தது. ஆனால், அது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மருத்துவ கல்லூரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழக்க, ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார். அவர் இங்கிலாந்து குடிமகனான 40 வயது விஸ்வஷ்குமார் ரமேஷ் ஆவார்.

விமானம் சிதறி ஆங்காங்கே எரிந்து கொண்டிருக்க, இவர் சிறு, சிறு காயங்கள் மற்றும் ஆங்காங்கே ரத்த கறைகளுடன் சாதாரணமாக நடந்து வந்த வீடியோ வைரலானது.

இவர் இந்த விபத்தில் பெரிய அளவில் பாதிக்கப்படாததற்கு காரணம், இவர் பயணித்த '11ஏ சீட்' என்று கூறப்பட்டது.

விமானம்
விமானம்

அப்போதெல்லாம் 11ஏ சீட் பிடிக்காத சீட்…. இப்போது அனைவருக்கும் பிடித்தமான சீட்…

இந்த கோர விபத்து நடப்பதற்கு முன்பு, விமானத்தில் இருக்கும் இந்த '11ஏ' சீட் பெரும்பாலும் யாருக்கும் பிடிக்காது. இந்த சீட் விமானத்தின் எமர்ஜன்சி எக்ஸிட் அருகே இருக்கும். அதனால், இந்த சீட்டை சாய்த்துகொள்ள முடியாது. அதனால், வெகுதூர பயணங்களுக்கு இந்த சீட் நமக்கு செட் ஆகாது என்று பயணிகள் இந்த சீட்டை தேர்ந்தெடுக்கமாட்டார்கள்.

ஆனால், ஜூன் 12-ம் தேதி, லக்கியான சீட்டாக 11ஏ இருந்துள்ளது. 1998-ம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடந்த விமான விபத்திலும், இந்த 11ஏ சீட்டில் அமர்ந்திருந்த நபர் உயிர் தப்பி உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.

டிமாண்ட் அதிகரிக்கும் 11ஏ சீட்!

தற்போது விமானத்தில் பயணிக்கும் பலரின் சாய்ஸ் ஆக இருக்கிறது இந்த இருக்கை. ஒருவேளை, விமான விபத்து எதுவும் ஏற்பட்டால், 11ஏ இருக்கை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை தரும் என மக்கள் நம்புகின்றனர்.

இதனால், இந்த சீட்டிற்காக கூடுதல் பணம் கட்ட கூட மக்கள் ரெடியாக இருக்கிறார்களாம்.

உண்மையில் 11 ஏ சீட் பாதுகாப்பானது தானா?

எமெர்ஜன்சி எக்ஸிட் சீட் குறித்து விமான போக்குவரத்து நிபுணர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை கூறுகின்றனர். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், விமானத்தின் முன்பக்க சீட்டில் இருக்கும் பயணிகள் விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படலாம். நடு வரிசை சீட்டுகள் ஓரளவுக்குப் பாதுகாப்பானதாகது. பின் சீட்டில் இருப்பவர்களே, அதிகபட்ச பாதுகாப்பை விபத்து சமயங்களில் பெறுகிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

விமானம்
விமானம்

இதுவும் கூட, விபத்தைப் பொறுத்து மாறலாம் என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு வகை விமானங்களில், ஒவ்வொரு இடத்தில் எமெர்ஜென்சி எக்ஸிட் இருக்கை அமைந்திருக்கும். போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்ற குறிப்பிட்ட மாடலில் மட்டுமே, 11ஏ சீட் எமர்ஜென்சி இருக்கைக்கு அருகே வரும். மற்ற மாடல்களில் எமெர்ஜென்சி இருக்கை வேறு இடத்தில் அமைந்து இருக்கும் என்று கூறுகிறார்கள்.

Flying Naked: 'இனி கம்மியான லக்கேஜ்தான்!' - விமானப் பயணிகளின் புதிய ட்ரெண்டு; பின்னணி என்ன?

சமூக ஊடகங்களில் தற்போது ‘Flying Naked’ என்ற புதிய ட்ரெண்ட் பரவி வருகிறது. விமானங்களில் பயணிக்கும்போது சிலர் தங்களின் உடைமைகளைக் குறைத்துக்கொண்டு பயணிக்கும் வீடியோக்களை #Flying Naked என்ற ஹாஷ்டேக்கில் ... மேலும் பார்க்க

RailOne App: டிக்கெட் புக்கிங் முதல் ஃபுட் ஆர்டர் வரை... எல்லாம் ஒரே செயலியில் - எப்படி?| How to

இனி ரயில் பயணங்களில் டிக்கெட் முதல் உணவு ஆர்டர் வரை அனைத்துமே 'ரயில் ஒன்' செயலி மூலம் ஈசியாக செய்துகொள்ளலாம். இந்த செயலி சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பெல்லாம், ரயில் டிக்கெட் முன்பத... மேலும் பார்க்க

ஸ்விசர்லாந்தில் இருக்கும் இந்த கிராமங்களில் குடியேறினால் ரூ. 50 லட்சம் வழங்கப்படும்!- ஏன் தெரியுமா?

ஸ்விசர்லாந்தின் ஆல்பைன் மலைத்தொடரில் அமைந்துள்ள கிராமங்கள் தங்களது மக்கள் தொகையை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதால் இக்கிராம... மேலும் பார்க்க

கடத்தல் போன்று நடந்த சம்பவம் எனக்கு ஒரு பாடமாகியது! - சுற்றுலாவிற்கு அனுபவ டிப்ஸ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

``கூமாபட்டி மட்டும் இல்ல, இங்கேயும் போகலாம்..'' - சுற்றுலாத்துறை சொல்லும் சுப்பர் ஸ்பாட்ஸ்

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ”கூமாபட்டி” என்ற கிராமம் திடீரென்று இணையதளத்தில் வைரலாகி, அந்த கிராமத்தை பார்க்க vlogger-கள் படையெடுத்து வருகின்றனர்.இந்நிலையில், கூமாப்பட்டியின் பிளவக்கல் அணை பகுதி ... மேலும் பார்க்க

கூமாபட்டி: `ஊட்டி, கொடைக்கானல் இல்ல; இங்கவாங்க..!’ - இணையவாசிகளிடம் திடீரென ட்ரெண்டான கிராமம்

ஒரு ரிலாக்ஸ் வேண்டும் என்றாலே பயணம் செய்ய வேண்டும் என்ற ட்ரெண்ட் உருவாகிவிட்டது. வழக்கமான இடத்தை தவிர்த்து மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று பலரும் விர... மேலும் பார்க்க