செய்திகள் :

ஸ்விசர்லாந்தில் இருக்கும் இந்த கிராமங்களில் குடியேறினால் ரூ. 50 லட்சம் வழங்கப்படும்!- ஏன் தெரியுமா?

post image

ஸ்விசர்லாந்தின் ஆல்பைன் மலைத்தொடரில் அமைந்துள்ள கிராமங்கள் தங்களது மக்கள் தொகையை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதால் இக்கிராமங்கள் வறண்ட நிலங்களாக மாறிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில், இங்கு புதிதாக குடியேற விரும்பும் வெளிநாட்டு மக்களுக்கு பெரும் ஊக்கத்தொகையை வழங்க அரசு தயாராக உள்ளது.

குறிப்பாக ஸ்விசர்லாந்தில் உள்ள Monti Scìaga, Albinen, Valais, Corippo போன்ற கிராமங்கள் குடியேறுபவர்களுக்கு சுமார் 50 லட்சம் இந்திய ரூபாய் (கிட்டதட்ட 60,000 ஸ்விஸ் ஃப்ராங்க்) வரை நிதி உதவியை வழங்குகின்றன. இது வெறும் ஊக்கத்தொகையாக மட்டுமன்றி, நிலம் வாங்குதல், வீடு கட்டுதல் மற்றும் இடம்பெயர்வு செலவுகள் ஆகியவை வழங்கப்படுகிறது.

Valais

இதற்கான நிபந்தனைகள் என்ன?

  • அப்படி ஸ்விசர்லாந்தின் ஆல்பைன் கிராமங்களில் குடியேற விரும்புவோருக்கு சில நிபந்தனைகள் உள்ளன.

  • குடியேறுபவர் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

  • ஸ்விசர்லாந்தில் நிரந்தர குடியுரிமை (Swiss residence permit) பெற்றிருக்க வேண்டும் அல்லது பெற தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

  • அவர்கள் அந்த ஆல்பைன் கிராமத்தில் நிரந்தர வீடு கட்டுவதற்கும் குறைந்தது 10 ஆண்டுகள் அந்த வீட்டில் வசிப்பதற்கும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

  • அந்த வீடு குறைந்தபட்சம் 200,000 ஸ்விஸ் ஃப்ராங்க் மதிப்புள்ளதாக இருக்க வேண்டும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.8 கோடி).

  • ஊக்கத்தொகை பெறும் குடும்பத்தில் குறைந்தது இரண்டு குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதும் சில கிராமங்களில் நிபந்தனை ஆகும்.

திட்டத்தின் நோக்கம் என்ன?

அழிவில் இருக்கும் கிராமங்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். குடியேறுபவர்கள் அங்கு தங்கள் குடும்பத்துடன் நிரந்தரமாக வாழ்ந்து, உள்ளூர் பண்பாடு, கல்வி, வேளாண்மை மற்றும் சுற்றுலா தொழிலில் பங்களிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு வாழ்க்கைமுறை எப்படி இருக்கும்?

இயற்கையின் மத்தியில் அமைதியான வாழ்க்கையை விரும்புவோருக்கு இந்த கிராமம் ஏற்றதாக இருக்கும். அதேசமயம், ஸ்விஸ் அரசாங்கத்தின் ஆதரவால் சாலை, இணைய இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

எப்படி தொடர்பு கொள்ளலாம்?

இந்த திட்டம் பற்றிய கூடுதல் தகவலுக்கு Swiss Alps official immigration officeஐ நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அதிகாரபூர்வ இணையதளங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டங்களுக்கான நிபந்தனைகள் கிராமத்திற்கு கிராமம் மாறுபடும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரபூர்வ தகவல்களை உறுதிப்படுத்துவது அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடத்தல் போன்று நடந்த சம்பவம் எனக்கு ஒரு பாடமாகியது! - சுற்றுலாவிற்கு அனுபவ டிப்ஸ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

``கூமாபட்டி மட்டும் இல்ல, இங்கேயும் போகலாம்..'' - சுற்றுலாத்துறை சொல்லும் சுப்பர் ஸ்பாட்ஸ்

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ”கூமாபட்டி” என்ற கிராமம் திடீரென்று இணையதளத்தில் வைரலாகி, அந்த கிராமத்தை பார்க்க vlogger-கள் படையெடுத்து வருகின்றனர்.இந்நிலையில், கூமாப்பட்டியின் பிளவக்கல் அணை பகுதி ... மேலும் பார்க்க

கூமாபட்டி: `ஊட்டி, கொடைக்கானல் இல்ல; இங்கவாங்க..!’ - இணையவாசிகளிடம் திடீரென ட்ரெண்டான கிராமம்

ஒரு ரிலாக்ஸ் வேண்டும் என்றாலே பயணம் செய்ய வேண்டும் என்ற ட்ரெண்ட் உருவாகிவிட்டது. வழக்கமான இடத்தை தவிர்த்து மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று பலரும் விர... மேலும் பார்க்க

பால்டிக் வானில் பறவையாய் பறக்கும் கனவுப் பயணம்! - குட்டி தேசங்களுக்கு ஒரு விசிட்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Tatkal Ticket-ஐ சிக்கலின்றி புக் செய்ய வேண்டுமா? IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?|How to

'தட்கல் டிக்கெட்டுகள் ஏஜென்டுகளுக்குத் தான் அதிகம் கிடைக்கின்றன' என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. இதை சரிசெய்யும் விதமாக, ரயில்வே துறை புதிய சில கண்டிஷன்களைக் கொண்டு வந்துள்ளது. அவை...1. தட்கல்... மேலும் பார்க்க

காஷ்மீர்: காவாவும் குல்மார்க்கும்; தல் ஏரியில் ஒரு மாய இரவும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க