ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
தலைநகரில் ஆயுதங்கள் பதுக்கி வைப்பு: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது
தலைநகரில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஒரு மாத காலமாக போலீஸாால் தேடப்பட்டு வந்த இந்த கும்பலிடம் இருந்து 13 நாட்டுத் கைத்துப்பாக்கிகள், ஒரு தானியங்கி கைத்துப்பாக்கி, 18 தோட்டாக்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மே 31-ஆம் தேதி இரவு கஷ்மீரி கேட் அருகே முகமது பிலால் (19) கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த நடவடிக்கை தொடங்கியது. அவரிடமிருந்து நான்கு கைத்துப்பாக்கிகள் மற்றும் எட்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பிலால் அலிகாரில் வசிக்கும் ஹாருன் மற்றும் அசிம் ஆகியோரிடமிருந்து துப்பாக்கிகளை வாங்கியதாகவும், ஏற்கெனவே பால்ஸ்வா டெய்ரி மற்றும் முகுந்த்பூா் பகுதிகளில் பல ஆயுதங்களை விநியோகித்ததாகவும் அவா் கூறினாா்.
அடுத்தடுத்த சோதனைகள் முகுந்த்பூரிலிருந்து கௌரவ் குமாா் ஜா இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் நான்கு தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டாா். மேலும் , ஜூன் 4- ஆம் தேதி, ஆயுதங்களை விநியோகித்தஅசிம், அலிகாரில் ஒரு கைத்துப்பாக்கி, உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் மற்றும் நான்கு தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டாா்.
இதே குழுவைச் சோ்ந்த மற்றொரு நபரான பரத் குமாா் ஜூன் 12- ஆம் தேதி நான்கு கைத்துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டாா். மேலும், ஜூன் 28 -ஆம் தேதி மேலும் ஒரு சிறுவன் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டாா். இவா்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.