பாக். சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சு: 2 நாள்களில் 50 பேர் கைது!
மறுவெளியீடாகும் மௌனம் பேசியதே?
நடிகர் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படம் விரைவில் மறுவெளியீடாகுமென தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2002-இல் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்துக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் யுவன்சங்கர் ராஜாவின் பாடல்கள் அனைத்தும் வெளியானபோதிலிருந்தே ரசிகர்களின் மிகவும் பிடித்தமான பாடல்களின் வரிசையில்தான் இருந்து வருகிறது.
இந்தப் படத்தில் த்ரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலர் நடித்துள்ளார்கள்.
தமிழகத்தில் ரீ-ரிலீஸ் கலாசாரம் அதிகரித்து வருகின்றன. நடிகர் விஜய்யின் பல படங்கள் தற்போது மறுவெளியீடாகி அசத்தி வருகிறது.
குறிப்பாக, விஜய்யின் கில்லி திரைப்படம் ரூ.50 கோடி வசூலித்து அசத்தியது. இதுவரை மறுவெளியீடான எந்தத் தமிழ்ப் படமும் இந்த மைல்கல்லை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சூர்யாவின் மௌனம் பேசியதே விரைவில் வெளியாகுமென தகவல் வெளியானது.

அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்காத நிலையில், சூர்யா ரசிகர்கள் இந்தப் பட போஸ்டரை எக்ஸ் தளத்தில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
It has been reported that the film Maunam Pesiyathe starring actor Suriya will be re-released soon.