திருப்புவனம் அஜித்குமாருக்கு கஞ்சா அளித்து கொடூரத் தாக்குதல்! மூளையில் ரத்தக் கச...
ஸ்டீவ் ஸ்மித் தேர்வு: 2-ஆவது டெஸ்ட்டுக்கான ஆஸி. பிளேயிங் லெவன்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் ஸ்டீவ் ஸ்மித் இடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் பார்படாஸில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் ஆஸி. அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஸ்மித் விளையாடுவார், ஆனால்...
இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் இடம்பிடித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கேட்ச் பிடிக்கும்போது ஸ்மித் விரலில் காயம் ஏற்பட்டது.
இந்தக் காரணத்தினால் மே.இ.தீ. அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. 2-ஆவது போட்டிக்கான பயிற்சியில் ஸ்மித் ஈடுபட்டுள்ளார்.
ஸ்மித் அணியில் இணைந்தாலும் முன்னெச்சரிக்கை காரணமாக ஃபீல்டிங்கில் ஸ்லிப்பில் நிற்காமல் எல்லைக் கோட்டுக்கு அருகில் எங்காவது நிற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜோஷ் இங்லீஷ் வெளியே...
ஜோஷ் இங்லீஷ் அணியில் இருந்து விலகியுள்ளார். கேமரூன் கிரீனுக்குப் பதிலாக லபுஷேன் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இடம்பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸி. பிளேயிங் லெவன்:
உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என ஆஸி. முன்னிலை பெற்றுள்ளது.