செய்திகள் :

2-வது டெஸ்ட்: ஷுப்மன் கில் 168* ரன்கள்; வலுவான நிலையில் இந்தியா!

post image

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 419 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இந்தியா - 419/6

முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்கள், கருண் நாயர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். ஷுப்மன் 114 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 3) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும், அவர் 89 ரன்களில் ஜோஷ் டங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வரும் கேப்டன் ஷுப்மன் கில் 150 ரன்களைக் கடந்தார்.

இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 419 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஷுப்மன் கில் 168 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

At the lunch break in the second Test against England, the Indian team had scored 419 runs for the loss of 6 wickets in its first innings.

இதையும் படிக்க: ஷுப்மன் கில் உலகத் தரத்திலான வீரர்: முன்னாள் இங்கிலாந்து வீரர்

ஷுப்மன் கில் அபாரம்; முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 2) தொடங்கியது.... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் முதல் இரட்டை சதம்; ஷுப்மன் கில் படைத்த சாதனைகள்!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 2) தொடங்கியது.... மேலும் பார்க்க

மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி.! டாஸ் வென்று பேட்டிங்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ... மேலும் பார்க்க

இரட்டை சதம் விளாசி அசத்திய ஷுப்மன் கில்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 2... மேலும் பார்க்க

ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை அணி!

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.வங்கதேச அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இ... மேலும் பார்க்க

ஸ்டீவ் ஸ்மித் தேர்வு: 2-ஆவது டெஸ்ட்டுக்கான ஆஸி. பிளேயிங் லெவன்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் ஸ்டீவ் ஸ்மித் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 5 டி20 ... மேலும் பார்க்க