திருப்புவனம் அஜித்குமாருக்கு கஞ்சா அளித்து கொடூரத் தாக்குதல்! மூளையில் ரத்தக் கச...
ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை அணி!
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
வங்கதேச அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், நேற்று முதல் ஒருநாள் தொடர் தொடங்கியது.
கொழும்புவில் நேற்று (ஜூலை 2) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தியது. டாஸ் வென்று முதலில் விளையாடிய இலங்கை அணி, 49.2 ஓவர்களில் 244 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சரித் அசலங்கா 123 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் 45 ரன்களும், ஜனித் லியாநாகே 29 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தன்சிம் ஹாசன் சாகிப் 3 விக்கெட்டுகளையும், தன்விர் இஸ்லாம் மற்றும் ஷாண்டோ ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
வெற்றியுடன் தொடங்கிய இலங்கை
245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், 35.5 ஒவர்களில் 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தன்சித் ஹாசன் 62 ரன்களும், ஜேக்கர் அலி 51 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும், அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் மஹீஷ் தீக்ஷனா தலா விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Sri Lanka has started the ODI series against Bangladesh with a win.