செய்திகள் :

ராமாயணா படத்தின் அறிமுக விடியோ!

post image

ரன்பீர், யஷ் நடிக்கும் ராமாயணா முதல் பாகம் படத்தின் அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

நமீதா மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை நிதிஷ் திவாரி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் இந்தப் படத்தில் ராமனாக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷ்ஷும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் 3 நிமிடங்கள் கொண்ட அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைப்பது உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தின் 7 நிமிட மற்றுமொரு க்ளிம்ஸ் விடியோ சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த விடியோவில் இந்தப் படம் எப்படி திட்டமிடப்பட்டு படமாக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும் எனவும் விரைவில் வெளியாகுமெனவும் கூறப்படுகிறது.

The teaser of the first part of Ramayana starring Ranbir and Yash has been released.

கூலி - அமீர் கான் போஸ்டர்!

கூலி திரைப்படத்திற்கான அமீர் கானின் முதல் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட... மேலும் பார்க்க

நரிவேட்டை ஓடிடி தேதி!

நரிவேட்டை படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டொவினோ தாமஸ் நடிப்பில், இயக்குநர் அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உருவான அரசியல் ஆக்‌ஷன் திரைப்படமான ‘நரிவேட்டை’ கடந்த மே.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெள... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்த... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃப்ரீடம் டிரைலர்!

சசிகுமார் நடிப்பில் உருவான ஃப்ரீடம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14’எனப் பெயரி... மேலும் பார்க்க

சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கேட்ட கௌதம் ராம் கார்த்திக்..!

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் தன் மீதான் சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கேட்டு, அதற்கான விளக்கமும் அளித்துள்ளார். நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் சமீபத்தில் தனது பெயரை கௌதம் ராம் கார்த்திக் என ம... மேலும் பார்க்க