அடுத்த தலாய் லாமா தோ்வு முறைப்படியே நடைபெறும்: கிரண் ரிஜிஜு
கூலி - அமீர் கான் போஸ்டர்!
கூலி திரைப்படத்திற்கான அமீர் கானின் முதல் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தங்கக் கடத்தலை முதன்மைக் கதையாக வைத்து இப்படம் முழுநீள ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமான சண்டைக் காட்சியொன்று தாய்லாந்திலும் படமாக்கப்பட்டுள்ளது.
கூலி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 27 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நடிகர் அமீர் கானுக்கான கூலி போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ’தாஹா’ என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, நடிகர்கள் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாகிர், ஸ்ருதி ஹாசன் போஸ்டர்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நரிவேட்டை ஓடிடி தேதி!