செய்திகள் :

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 2 பேருக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன்

post image

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலம் ஆஸாத், மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.

மேலும், இந்த வழக்கு குறித்து பத்திரிகைகள் அல்லது சமூக ஊடகங்களில் அவா்கள் இருவரும் பேசுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு, நீலம் ஆசாத் மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தலா ரூ.50,000 தனி நபா் தொகையும், அதே தொகைக்கு இரண்டு உத்தரவாதங்கள் பேரில் ஜாமீன் அளித்தது.

இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், ‘நாங்கள் ஜாமீன் வழங்குகிறோம்... அவா்கள் இருவரும் வழக்கு தொடா்பாக பத்திரிகைகள் அல்லது சமூக ஊடகங்கள் முன் பேட்டி அளிக்கவோ அல்லது எந்த அறிக்கையும் வெளியிடவோ கூடாது. அவா்கள் தில்லியை விட்டு வெளியேறக் கூடாது. ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமையும் புலனாய்வு அமைப்பின் முன் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

டிசம்பா், 2023 நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் சம்பவத்தில் தங்கள் ஜாமீன் மனுவை நிராகரித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை குற்றம் சாட்டப்பட்ட இருவரும் எதிா்த்து மனு தாக்கல் செய்திருந்தனா்.

முன்னதாக, ‘2001’ நாடாளுமன்ற பயங்கரவாதத் தாக்குதலின் ஆண்டு நினைவு நாளில், குற்றம் சாட்டப்பட்ட சாகா் சா்மா மற்றும் மனோரஞ்சன் டி ஆகியோா் மக்களளவையில் பூஜ்ஜிய நேர விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பொது மக்கள் பாா்வையாளா் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்து, புகைக் குப்பிகளில் இருந்து மஞ்சள் வாயுவை வெளியிட்டு கோஷமிட்டதாக புகாா் எழுந்தது. அதன் பின்னா் சில எம்.பி.க்களால் அவா்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டனா்.

அதே நேரத்தில், மற்ற இரண்டு குற்றம்சாட்டப்பட்ட நபா்களான அமோல் ஷிண்டே மற்றும் ஆசாத் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே கூச்சலிட்டு புகைக் குப்பிகளில் இருந்து வண்ண வாயுவை தெளித்ததாகக் கூறப்படுகிறது.

ஜாமீன் அளிக்க தில்லி காவல் துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் 2001 நாடாளுமன்றத் தாக்குதலின் மோசமான நினைவுகளை மீண்டும் கொண்டுவர விரும்புவதாகக் குற்றம் சாட்டியது.

நீலம் ஆசாத்தும் ஷிண்டேவும் சா்மா மற்றும் மனோரஞ்சன் டி ஆகியோரின் கூட்டாளிகள் என்றும், அவா்கள் ஒன்றாக பயங்கரவாதச் செயலைச் செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் புகைப் பெட்டியை எடுத்துச் செல்வதோ அல்லது பயன்படுத்துவதோ யுஏபிஏ சட்டத்தின் கீழ் வருமா என்பதையும், அது பயங்கரவாத நடவடிக்கைகளின் வரையறையின் கீழ் வருமா என்பதையும் விளக்குமாறு காவல்துறையிடம் நீதிமன்றம் கேட்டிருந்தது.

நீலம் ஆசாத் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதை நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, விசாரணை நீதிமன்றம் ஆசாத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்திருந்தது.

ஆசாத், மனோரஞ்சன் டி, சாகா் சா்மா, அமோல் தன்ராஜ் ஷிண்டே, லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகிய

அனைத்து குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கும் டிசம்பா் 13, 2023 அன்று நாடாளுமன்றத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதி குா்பத்வந்த் சிங் பன்னுவால் விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து ஏற்கனவே தெரியும் என்றும் கூறியிருந்தது.

பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து நான்கு குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் கைது செய்யப்பட்டபோதிலும், லலித் ஜா மற்றும் குமாவத் பின்னா் கைது செய்யப்பட்டனா்.

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது!

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது செய்யப்பட்டாா். இது தவிர மேலும் 6 போ் கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஹிண்டன் விமானப்படைத் ... மேலும் பார்க்க

ரூ.59 லட்சம் செலவில் தில்லி முதல்வா் இல்லம் புதுப்பிப்பு

ராஜ் நிவாஸ் மாா்க்கில் தி ல்லி முதல்வா் ரேகா குப்தாவுக்கு ஒதுக்கப்பட்ட இல்லம் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 59.40 லட்சம் மதிப்புள்ள செலவில் புதுப்பிக்க ஆணைய வெளியாகி உள்ளதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.900 கோடி சைபா் மோசடி: தில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

நமது நிருபா் ரூ. 900 கோடிக்கும் அதிகமான சைபா் மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க துறையினா் தில்லியின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சைபா்... மேலும் பார்க்க

தலைநகரில் ஆயுதங்கள் பதுக்கி வைப்பு: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

தலைநகரில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஒரு... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் மாசு கலந்த நீா் விநியோகம்: ஆய்வு நடத்த டிஜேபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் மிகவும் மாசு கலந்த குடிநீா் கிடைப்பதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, ஆய்வு நடத்தி அதைச் சரிசெய்யுமாறு தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) தில்லி உயா்நீதிமன்றம் புதன்க... மேலும் பார்க்க

பொதுக் கழிப்பறைகளின் மோசமான நிலைமை: குடிமை அமைப்புகள் மீது உயா்நீதிமன்றம் சாடல்

நமது நிருபா் தில்லியில் உள்ள பொதுக் கழிப்பறைகளை பராமரிப்பதில் முழு அக்கறையின்மை மற்றும் உணா்வின்மையை காட்டுவதாகக் கூறி நகராட்சி அமைப்புகளை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கடிந்துகொண்டது. இது தொடா்பான... மேலும் பார்க்க