மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
`Ajithkumar lockup death-ல நிகிதா பின்னால் இருப்பது யார்?' Piyus Manush அட்டாக்!
அதிரவைத்த சிவகங்கை சம்பவம். அஜித் குமாருக்கு நடந்த சித்ரவதைகள். இதில் கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல அவர்களோடு பின்னணியில் இருக்கும் உயர் அதிகாரிகளும், குறிப்பாக நிகிதா-வின் பின்னணி என்னவென்று விசாரிக்க வேண்டும். பொதுவாக 'கஸ்டடியில் டார்ச்சர்' என்பது மிகக் கொடூரமானது. நானே நேரடியாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன். தொடர்ந்து லத்தி-யால் லாடம் கட்டப்படுவதால் ஏற்படும் உடலியல், உளவியல் துன்பங்கள். முக்கியமாக 2016-ல் போலீசாரால் சிறையில் கடுமையாக தாக்கப்பட்ட நான், '2020'-இல் ஹார்ட் அட்டாக்-கால் பாதிக்கப்பட்டேன். உயிர் பிழைத்ததே அதிசயம். இருந்தும் தைரியமாக எதிர்த்ததால் குறைந்த பட்சம் போலீசுக்கு பயம் ஏற்பட்டது. நீதிக்கான போராட்டத்தை தொடர்ந்து வருகிறேன். 'கஸ்டடியில் டெத்' -ஐ எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும். மக்கள் போராடாமல் இருக்கவே, அவர்களை பயமுறுத்தும் வேலைகளில் அரசும் ஈடுபடுகிறது. இந்த நான நான்காண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட 'லாக் அப்' டெத்துகள் நடந்ததாக புள்ளி விபரங்கள் அதிர வைக்கின்றன. இதை தடுக்க சிஸ்டத்தை மாற்ற வேண்டும். விஞ்ஞானபூர்வமான விசாரணை முறையை கடைபிடிக்க வேண்டும். இதை செய்வாரா மு.க ஸ்டாலின்?' என தமது நேர்காணலில் போட்டுத் தாக்கி பேசியுள்ளார் மனித உரிமை செயல்பாட்டாளர் பியூஸ் மனுஷ்.