செய்திகள் :

'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி

post image

சிவகங்கை மடப்புரத்தில் போலீஸாரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் வழக்கில் சக்தீஸ்வரன் என்பவர் முக்கிய சாட்சியாக மாறியிருக்கிறார். அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் சம்பவத்தை சக்தீஸ்வரன் வீடியோ எடுத்திருந்தார். அந்த வீடியோதான் நீதிமன்றத்திலும் சாட்சியாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

சிவகங்கை காவல் மரணம் - ஹென்றி திபேன்
சிவகங்கை காவல் மரணம் - ஹென்றி திபேன்

இந்நிலையில், சக்தீஸ்வரன் தனக்கும் இன்னும் சாட்சியாக மாறவிருப்பர்களுக்கும் பாதுகாப்பு வேண்டி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இது சம்பந்தமாக பத்திரிகையாளர்களையும் சந்தித்திருந்தார்.

சக்தீஸ்வரன் பேசியதாவது, ''நீதிபதியே எனக்கு பாதுகாப்பு கொடுக்க சொன்னாரு. ஆனா, யாரும் கொடுக்கல. என் உயிர் போனாலும் பிரச்னை இல்லை. ஆனா, என்னையை பார்த்து நிறைய பேர் சாட்சி சொல்ல வந்தாங்க. அவங்க இப்போ பின் வாங்குற மாதிரி தெரியுது.

சக்தீஸ்வரன்
சக்தீஸ்வரன்

குற்றத்தில் சம்பந்தப்பட்ட எல்லோர் மீதும் நடவடிக்கை எடுங்கள். அஜித் இறந்த சம்பவத்திலிருந்தே எங்களால் மீண்டு வர முடியவில்லை. எனவே மேலும் அழுத்தம் ஏற்றாதீர்கள். எங்களுக்குப் பாதுகாப்பு கொடுங்கள். நாங்கள்தான் அஜித்தை அடித்து காவல்துறையில் ஒப்படைத்தோம் எனத் தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு தூக்கமே வரவில்லை. அஜித்தைக் காப்பாற்ற முடியவில்லையே என்கிற வருத்தம் இன்னமும் இருக்கிறது. அஜித் குமாரைத் தாக்கிய போது மிளகாய் பொடியை யார் வாங்கி வரச் சொன்னது, யார் வாங்கி வந்தது என எல்லாவற்றையும் விசாரணையின் போது சொல்லியிருக்கிறேன்.' என்றார்.

'சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் அஜித்குமார் மரணம் பற்றி வாய்திறக்காதது ஏன்?'- ஜெயக்குமார் கேள்வி

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொ... மேலும் பார்க்க

"அஜித்குமாரை சித்ரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?" - அன்புமணி கேள்வி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அஜித்குமார் என்பவர் தனிப்படை போலீஸாரின் சித்ரவதையால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.பின்னர் இது கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு, இதில் ஈடுபட்ட போலீஸார் 5 பேர் கைதுச... மேலும் பார்க்க

பாமக: "அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு..." - ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க

"டார்ச்சர் செய்றாங்க... என் சாவுக்கு திமுக-வினர் காரணம்" - ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை

திருப்பூர் மாவட்டம், குண்டடம் மேற்கு ஒன்றியத்தின் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருந்தவர் செல்வானந்தம். இவரது மனைவி முத்துபிரியா நவநாரி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார்.திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

மிஸ்டர் கழுகு: சீனியரை மாற்ற விரும்பாத தலைமை.. டு மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய அண்ணன்!

ஆட்டம் காட்டும் மேலிட உறவுப்புள்ளி!சீனியரை மாற்ற விரும்பாத தலைமை...சூரியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சீனியரை மாற்றும் எண்ணத்தில் முதன்மையானவர் இல்லையாம். ஆனாலும், ‘அவர் மாற்றப்பட உள்ளார... மேலும் பார்க்க

TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imperfect Show 2.7.2025

* தலைமைச் செயலக அதிகாரி கொடுத்த அழுத்தம் தான் தனிப்படை விசாரிக்கக் காரணமா?* காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* "SORRY தான் ப... மேலும் பார்க்க