செய்திகள் :

"அஜித்குமாரை சித்ரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?" - அன்புமணி கேள்வி

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அஜித்குமார் என்பவர் தனிப்படை போலீஸாரின் சித்ரவதையால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

பின்னர் இது கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு, இதில் ஈடுபட்ட போலீஸார் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.

அஜித்குமார்
அஜித்குமார்

அதேசமயம், இதில் சிபிஐ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசுப் பணியும், அவரது குடும்பத்துக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் தமிழக அரசு வழங்கியிருக்கிறது.

இவ்வாறு, இச்சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் வேளையில், "அஜித்குமாரை சித்ரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அன்புமணி, "சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தியிருக்கிறார்.

'நிகிதா'-வுக்கு உதவிய அதிகாரி யார்? Stalin-க்கு லாக் போடும் EPS & Vijay! | Elangovan Explains

சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட அஜித்குமார். இதில் அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா யார்? 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது '420' கேஸ் போடப்பட்டு உள்ளது என பகீர் பின்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் வீட்டு விசேஷம்!

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் பர்சனல் செகரடரியாக இருந்த ரவிராஜின் மகள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன் தினம் தஞ்சாவூரில் நடைபெற்றது. ரொம்பவே சிம்பிளாக நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமா... மேலும் பார்க்க

'சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் அஜித்குமார் மரணம் பற்றி வாய்திறக்காதது ஏன்?'- ஜெயக்குமார் கேள்வி

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொ... மேலும் பார்க்க

'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி

சிவகங்கை மடப்புரத்தில் போலீஸாரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் வழக்கில் சக்தீஸ்வரன் என்பவர் முக்கிய சாட்சியாக மாறியிருக்கிறார். அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் சம்பவத்தை சக்தீஸ்வரன் வீடியோ எட... மேலும் பார்க்க

பாமக: "அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு..." - ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க

"டார்ச்சர் செய்றாங்க... என் சாவுக்கு திமுக-வினர் காரணம்" - ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை

திருப்பூர் மாவட்டம், குண்டடம் மேற்கு ஒன்றியத்தின் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருந்தவர் செல்வானந்தம். இவரது மனைவி முத்துபிரியா நவநாரி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார்.திண்டுக்கல் ம... மேலும் பார்க்க