தஞ்சாவூர்: ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் வீட்டு விசேஷம்!
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் பர்சனல் செகரடரியாக இருந்த ரவிராஜின் மகள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன் தினம் தஞ்சாவூரில் நடைபெற்றது. ரொம்பவே சிம்பிளாக நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் நூறு பேர் வரை கலந்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த காலத்திலேயே ஜெ..ஜெயலலிதாவின் பர்சனல் செகரட்டரியாக இருந்தவர் ரவிராஜ். தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் ஜெ.யிடம் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். அதாவது ஜெயலலிதா அரசியலில் நுழைந்த காலத்திலிருந்து 91ம் ஆண்டு முதல் முறை முதல்வரானது வரை இவர் ஜெ.யின் செகரட்டரியாக இருந்தார்..


ஜெயலலிதா முதல்வரான பிறகு சில பல காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேறிய இவர் பத்திரிகையாளராகவும் சில காலம் சென்னையில் பணிபுரிந்தார். கவிதைகளும் எழுதுபவர் என்பதால் நட்பு வட்டத்தினர் இவரை கவிஞர் என்கிறார்கள்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தஞ்சாவூருக்கே சென்று விட்டவர் தற்போது அங்குதான் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது மகள் லட்சுமி பிரபாவுக்கும் மன்னார்குடியைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி அர்ஜுனனின் மகன் பிரேம் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. இந்த திருமணா நிச்சயதார்த்த நிகழ்வு ரவிராஜின் வீட்டில் வைத்தே சிம்பிளாக நடைபெற்றது. பிரேம் குமார் பொறியாளராக இருக்கிறார். லட்சுமி பிரபா ஆர்க்கிடெக்டாம். அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அமமுக-வைச் சேர்ந்த இந்நாள் நிர்வாகிகள் என பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்களாம். திருமணம் அடுத்த சில மாதங்களில் இருக்குமென்கிறார்கள்.