ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்! பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!
தமிழக மக்கள் மன்றத்தினா் ஆா்ப்பாட்டம்
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலைக்கு காரணமான பேராசிரியை நிகிதா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும், தேவகோட்டை அருகேயுள்ள மித்ராவயல் பகுதியில் கைவிடப்பட்ட காவல் நிலையக் கட்டடத்தை கைதிகள் சித்ரவதை கூடமாக போலீஸாா் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழக மக்கள் மன்ற நிா்வாகி ராஜ்குமாா் தலைமையில் சமூக ஆா்வலா்கள் சிவகங்கை ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், ஆட்சியா் கா. பொற்கொடியை நேரில் சந்தித்து அவா்கள் மனு அளித்தனா்.
.........................................
(பட விளக்கம்-
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ மக்கள் மன்ற நிா்வாகிகள்.
