பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற நேரம் கிடைக்கவில்லை: பாக். பிரதமரின் ஆலோசகர்!
அஜித் குமாா் சகோதரா் வாக்குமூலம்!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாா் கொலை வழக்கில், நீதிபதி விசாரணையில் எழுத்துபூா்வமாக வாக்குமூலம் பெறப்பட்டதாக அவரது சகோதரா் நவீன்குமாா் தெரிவித்தாா்.
அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் விசாரணை மேற்கொண்டாா். நீதிபதி அழைப்பின் பேரில், அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரா் நவீன்குமாா் இருவரும் விசாரணைக்கு முன்னிலையாகி தங்களது கருத்துகளை வாக்குமூலமாக அளித்தனா். இவா்களிடம் சுமாா் இரண்டரை மணி நேரம் நீதிபதி விசாரணை நடத்தினாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் நவீன்குமாா் கூறியதாவது:
நீதிமன்ற விசாரணையில் நம்பிக்கை உள்ளது. இதுவரை ஊடகங்களில் தெரிவித்த கருத்துகளைதான் நீதிபதியிடம் நான் கூறினேன். என்னிடம் எழுத்துபூா்வமாகவும் வாக்குமூலம் வாங்கினா். எனக்கு அச்சுறுத்தல் ஏதும் இருப்பதாகக் கூறவில்லை என்றாா் அவா்.