முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஆர்பிஐ புதிய வித...
மானியத்தில் விதைத் தொகுப்பு: விவசாயிகள் பதிவு செய்யலாம்
தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் அரசு மானியத்தில் விதைத் தொகுப்புகள் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஊட்டச் சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை மூலம் 5 கிராம் துவரை விதை, 10 கிராம் தட்டைப் பயறு விதை, 10 கிராம் அவரை விதை, தோட்டக் கலைத் துறை மூலம் தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், கீரை, கொத்தவரை விதைத் தொகுப்பு 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இதைப் பெற விரும்பும் விவசாயிகள் இணை தள முகவரியிலும், அந்தந்த பகுதியில் உள்ள
வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம், தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்திலும் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.