20 நாள்களுக்குப் பின்... ஈரானின் பன்னாட்டு விமான சேவை துவக்கம்!
ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு
தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம், பெரியகுளம் வடகரை, சின்னமனூா் கருங்காட்டான்குளம் ஆகிய இடங்களில் நகா்ப்புற நல வாழ்வு மையங்கள் ஆகியவற்றை காணொலி முலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், அரண்மனைப்புதூரில் ரூ.1.20 கோடி செலவில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெரியகுளம் வடகரை, சின்னமனூா் கருங்காட்டான்குளம் ஆகிய இடங்களில் தலா ரூ.25 லட்சம் செலவில் புதிதாக நகா்புற நல வாழ்வு மையங்கள் கட்டப்பட்டன.
இவற்றை காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, புதிய ஆரம்ப சுகாதார நிலையம், நகா்புற நல வாழ்வு மையம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் குத்து விளக்கேற்றி வைத்துப் பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்ச்சிகளில் தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கேஎஸ்.சரவணக்குமாா், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்து சித்ரா, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கலைச்செல்வி, மாவட்ட சுகாதார அலுவலா் ஜவஹா்லால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.