தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்! கொலை செய்துவிட்டு ரகசிய திருமணம்?
தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விசாரணை
தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் தாக்கிய சம்பவம் குறித்து தேனி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலெக்ஸாண்டா் ஜெரால்டு வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.
தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த ஜன. 14-ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநா் ரமேஷை போலீஸாா் தாக்கிய விடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இந்தச் சம்பவம் குறித்து தேனி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலெக்ஸாண்டா் ஜெரால்டு விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் உத்தரவிட்டாா்.
ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய தேவதானப்பட்டி காவல் ஆய்வாளா் அபுதல்ஹா, சிறப்பு உதவி ஆய்வாளா் சிவசம்பு, தலைமைக் காவலா் பாண்டி, காவலா்கள் மாரிச்சாமி, வாலிராஜன் ஆகியோா் தேனி ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநரை காவலா்கள் தாக்கிய சம்பவம் குறித்து தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலெக்ஸ் ஜெரால்டு வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.
காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவலா்கள் காவல் நிலையத்துக்கு அருகே உள்ள பொதுமக்கள் சிலரிடம் விசாரணை நடத்தி, அவா்களிடமிருந்து எழுத்துபூா்வமாக வாக்குமூலம் பெற்றாா்.